முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அலு­வ­லக பிர­தா­னி­யாக செயற்­பட்ட காமினி செனரத் இம்­மாதம் 9 ஆம் திகதி கோட்டை நீதிவான் நீதி­மன்றில் சர­ண­டைய தயார் என அறி­வித்­துள்ளார். 

இது தொடர்பில் நேற்­றைய தினம் அவ­ரது சட்­டத்­த­ர­ணிகள் உயர்­நீ­தி­மன்­றுக்கு அறி­வித்­தனர். நிதிக்­குற்றப் புல­னாய்வு பிரி­வினர் தம்மை கைது செய்ய முயற்­சிப்­ப­தா­கவும் அதனை தடுத்து நிறுத்­து­மாறு கூறியும் காமினி செனரத் உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­தி­ருந்த அடிப்­படை உரிமை மீறல் மனு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­தோடு அவ­ரது சட்­டத்­த­ர­ணிகள் இவ்­வி­ட­யத்தை நீதி­மன்­றுக்கு தெரி­வித்­தனர். 

அத்­துடன் நிதிக்­குற்றப் புல­னாய்வு பிரி­வினர் முன்­னெ­டுக்கும் விசா­ர­ணை­க­ளுக்கு பூரண ஒத்­து­ழைப்பை வழங்க தான் தயார் எனவும் காமினி செனரத் தனது சட்­டத்­த­ர­ணி­க­ளூ­டாக நீதி­மன்­றுக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யுள்ளார்.

அதன்­படி இது தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணை­களை எதிர்­வரும் 17 ஆம் திக திக்கு உயர்நீதி­மன்றம் ஒத்­தி­வைத்­தது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அலு­வ­லக பிர­தா­னி­யாக செயற்­பட்ட காமினி செனரத் உள்­ளிட்ட மூவ­ருக்கு கடந்த ஒக்­டோபர் 31 ஆம் திகதி கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன வெளி­நாட்டு பயணத் தடைவிதித்து உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்தார். நிதிக்­குற்ற புல­னாய்வு பிரி­வினர் முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­யொன்று தொடர்பில் காமினி செனரத் உள்­ளிட்­டோரை கைதுசெய்­வ­தற்­கான அவ­சியம் ஏற்­பட்ட நிலையில் அம்­மூ­வரும் விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைக்­காது இருந்து வந்­த­மையால் நிதிக்­குற்ற புல­னாய்வு பிரிவின் கோரிக்­கைக்கு அமை­வாக இந்த பய­ணத்­தடை விதிக்­கப்­பட்­டது. 

காமினி செனரத், பிய­தாச குடா­பா­லகே, நீல் பண்­டார அப்­பு­ஹின்ன ஆகி­யோரின் வெளி­நாட்டு பய­ணமே தடை­செய்­யப்­பட்­டுள்­ளது. 

கடந்த அரசின் காலப்­ப­கு­தியில் அமைச்­சர­ வையின் அனு­மதி­யுடன் இலங்கை காப்­புறுதி கூட்டுத்தாபனம் மற்றும் ஊழியர் சேம­லாப நிதி­யத்­துக்கு சொந்த­மான 18.5 பில்­லியன் ரூபா முத­லீடு செய்­யப்­பட்டு ஆரம்­பிக்­கப்­பட்ட சினோ லங்கா ‍ஹோட்டல் திட்­டத்­துக்கு ஒதுக்­கப்­பட்ட நிதி­யி­லி­ருந்து 4.4 பில்­லியன் ரூபாவை சட்­ட­வி­ரோ­த­மாக அம்­பாந்­தோட்டை கிரான்ட் ஹைட் ஹோட்டல் திட்டத்துக்கு பயன்படுத்தி பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டே காமினி செனரத் உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணைகள் நிதிக்குற்றப்புலனாய்வு பிரி வினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.