"வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் உங்களுக்காக குரல்கொடுக்ககூடிய ஒருவரை தெரிவு செய்யுங்கள்" என இலங்கை  தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஆறுமுகம் தொண்டமான் ஹட்டன் பிரதேச தோட்டப்பகுதிகளில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.  

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான. பி.இராஜதுரை ஜெகதீஸ்வரன் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது தொடர்ந்து உரையாற்றிய தொண்டமான்,

"கடந்த கால உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெளி பிரதேசத்தை சேர்ந்தவரகளுக்கு வாக்களிக்கும் நிலை இருந்தது.  வாக்களித்தப்பின்னர் அபிவிருத்திகளுக்கு அவர்களை தேடியலையும் நிலை இருந்தது. ஆனால் வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொகுதிவாரியான தேர்தலாகும். உங்கள் பிரதேசத்திலிருந்து உங்களுக்கான பிரதநிதியை தெரிவு செய்ய முடியும்.

ஆகவே  உங்களுக்கு  பிரச்சினை ஏற்படும் போது முன்வந்து நிற்ககூடிய உங்கள் பிரதேச அபிவிருத்தியை திறம்பட செய்யக்கூடிய ஒருவரை தெரிவு செய்யுங்கள்.  கடந்த காலத்தில் தொட்டால் சுடும் என்றோம் கேட்கவில்லை இப்போது சுட்டு விட்டது என்பதை உணர்ந்து இருப்பீர்கள் என நினைக்கின்றேன், சிந்தித்து  வரும் உள்ளூராட்சி தேர்தலில் செயல்படுங்கள்" என்றார்