கடந்த 2015 ஆம் ஆண்டு தெமட்டகொடையில் வைத்து இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவைத் தவிர ஏனைய எட்டுப் பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி, ஹிருணிக்காவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டு, பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்க உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக, சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு பேரும் தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஹிருணிக்கா தவிர்ந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட குறித்த எட்டு பேருக்கும் எதிர்வரும் 24 ஆம் திகதி தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM