மலே­சி­யாவில் நடை­பெ­ற­வுள்ள 19 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்­கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்­டியில் வெற்­றி­பெறும் குறிக்­கோ­ளுடன் பங்­கு­பற்­ற­வுள்­ள­தாக அணித் தலைவர் கமிந்து மெண்டிஸ் தெரி­வித்தார்.

எட்டு நாடுகள் பங்­கு­பற்றும் 19 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்­கான ஆசிய கிண்ணப் போட்­டியில் பங்­கு­பற்றும் இலங்கை அணியை அறி­விக்கும் ஊடக சந்­திப்­பின்­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

‘‘தென்­னா­பி­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா போன்ற நாடு­க­ளுடன் விளை­யா­டிய அனு­பவம் கொண்ட சில வீரர்கள் அணியில் இடம்­பெ­று­வது தனக்கும் அணிக்கும் தெம்­பூட்­டு­கின்­றது. இம்­முறை ஆசிய கிண்­ணத்தை வெல்­வ­தற்கு கடு­மை­யாக முயற்­சிப்போம்’’ என அவர் மேலும் குறிப்­பிட்டார்.

இதே­வேளை 19 வய­துக்­குட்­பட்ட இளம் வீரர்கள் இலங்­கையின் வருங்­கால நட்­சத்­தி­ரங்கள் எனக் குறிப்­பிட்ட இலங்கை கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால, தேசிய அணிக்கு வழங்­கிய சகல வச­தி­களையும் இளம் அணிக்கு வழங்­கி­யுள்ள­தா­கவும் அவர்கள் திற­மையை வெளிப்­ப­டுத்தி தேசத்­திற்கு புக­ழீட்­டிக்­கொ­டுப்­பார்கள்  என நம்­பு­வ­தா­கவும் கூறினார்.

19 வய­துக்­குட்­பட்ட ஆசிய கிண்ணப் போட்­டியில் இந்­தியா, பங்­க­ளாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகள் குழு 'ஏ'யிலும் இலங்கை, பாகிஸ்தான், ஆப்­கா­னிஸ்தான் மற்றும் தெற்கு வலய வெற்றி அணி குழு 'பி'யிலும் போட்­டி­யி­டு­கின்­றன. இப் போட்­டிகள் மலே­சி­யாவில் எதிர்­வரும் 9ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளன.

19 வய­துக்­குட்­பட்ட இலங்கை குழாம்:

கமிந்து மெண்டிஸ் (தலைவர்), ஜெஹான் டெனியல், ஆஷேன் பண்டார, தனஞ்சய, நிஷான் முதுஷன்க, நிப்புன தனஞ்சய, போயகொட, கிரிஷான் சுஞ்சுல, நவிந்து, ரந்திர் ரணசிங்க, திசரு ரஷ்மிக்க, பி. ஜயவிக்ரம, கலன பெரேரா, கே.கே. கெவின், திலான் ப்ரஷான்.