டயலொக் றக்பி லீக் தொடரின் முதல் போட்­டியில் நடப்பு சம்­பி­ய­னான கண்டி விளை­யாட்டுக் கழகம் மற்றும் சி.எச். அண்ட் எவ்.சி. அணிகள் மோதிய போட்­டியில் கண்டி அணி வெற்­றி­பெற்­றது.

2017 மற்றும் 2018ஆம் ஆண்­டு­க­ளுக்­கான பரு­வ­கால டயலொக் றக்பி லீக் தொடர் கடந்த சனிக்­கி­ழமை ஆரம்­ப­மா­னது.

இதில் ­ந­டை­பெற்ற முதல் போட்­டியில் கண்டி அணி­யா­னது பெரும் புள்­ளிகள் வித்­தி­யா­சத்தில் அபார வெற்­றி­யீட்டும் என எதிர்­பார்க்­கப்­பட்ட போதிலும் அவ்­வணி மந்­த­மான விளை­யாட்டுப் பாணியின் கார­ண­மாக கடும் போட்­டிக்கு பின்னர் 23 – 06 என்ற புள்­ளிகள் கணக்கில் வெற்­றியை தன­தாக்கிக் கொண்­டது.

கொழும்பு குதி­ரைப்­பந்­தயத் திடல் மைதா­னத்தில் நடைபெற்ற இப்­போட்டியை கண்டி அணியின் நட்­சத்­திர வீரர் பாசில் மரிஜா ஆரம்­பித்து வைத்தார். 

போட்­டியின் ஐந்­தா­வது நிமி­டத்தில் திலின விஜே­சிங்க பெனால்டி உதை­யொன்றின் மூலம் கண்டி அணிக்கு முதல் புள்­ளி­களைப் பெற்றுக் கொடுத்தார். 

அதன் பின்னர் இரு அணி­களும் தொடர்ந்து தவ­று­களை விட்ட வண்ணம் விளை­யா­டி­யதால் எவ்­வ­ணி­யி­னாலும் புள்­ளி­களைப் பெற முடி­ய­வில்லை. 

எனினும் கண்டி அணி ஒரு­வா­றாக சுதா­­ரித்­துக்­கொண்டு ஆடி புள்­ளி­களைப் பெற எதி­ர­ணியால் இவர்­களின் வேகத்­திற்கு ஈடு­கொ­டுக்க முடி­ய­வில்லை. இறுதியில் கண்டி விளையாட்டுக் கழகம் 23 – 06 என்ற புள்ளிகள் அடிப்படை யில் வெற்றிபெற்றது.