நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த இரு வெளிநாட்டவர்களும் குடிவரவு குடியகல்வு சட்ட விதிமுறைகளை மீறி, உணவு விடுதியொன்றில் வேலை செய்து கொண்டிருந்த நிலையிலேயே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்னர்.

குறித்த இருவரும் தெஹிவளை - ஹில் வீதிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.