மாத்தளை, லக்கலை, தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்ற நிலையில்  காணாமல்போன  மற்றொருவரின் சடலம் மீட்கப்பட்டுள் நிலையில் ஆற்றில் காணாமல் போன 8 பேரில் இது வரை 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகல் தெல்கமு ஓயவில் குளிக்கச்சென்ற எட்டுப் பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பிரதேச மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்றையதினம் ஐவரின் சடலங்களை மீட்டனர்.

இந்நிலையில், ஏனைய மூவரை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் இன்று நான்கு வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், 12 மற்றும் 7 வயதான இரு சிறுமிகளைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக செய்திகளுக்கு 

மாத்தளையில் சோகம் : ஆற்றில் குளிக்கச் சென்ற 10 பேர் மாயம்

ஆற்றில் மூழ்கி காணாமல்போன ஐவரின் சடலம் மீட்பு

மூவரைத் தேடும் பணி தொடர்கிறது ; கடற்படையின் சுழியோடிகள் களத்தில்