மாத்தளை, லக்கலை - தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்று காணாமல் போன மேலும் மூவரைத் தேடும் நடவடிக்கைகள் இன்றும் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை, காணமால் போனவர்களை தேடும் நடவடிக்கையில், கடற்படையின் விசேட சுழியோடிகள் கொண்ட குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாத்தாண்டியாவில் இருந்து வேனில் மாத்தளை, லக்கலை தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்ற   அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல்போயிருந்தனர்.

இந்நிலையில், அவர்களில் ஐவரின் சடலம் கடற்படையினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் துணையுடன் மீட்கப்பட்டது.

இவ்வாறு  இரண்டு ஆண்கள் மற்றும் மூன்றும் பெண்களின் சடலங்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

இந்தநிலையில், மீதமுள்ள மூன்று பேரைத் தேடும் நடவடிக்கைகள், இன்றையதினமும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளுக்கு 

மாத்தளையில் சோகம் : ஆற்றில் குளிக்கச் சென்ற 10 பேர் மாயம்

ஆற்றில் மூழ்கி காணாமல்போன ஐவரின் சடலம் மீட்பு