மாத்தளை, லக்கலை தெல்கமு ஆற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போனவர்களில் ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மாத்தளை, லக்கலை தொல்கமு ஆற்றில் 8 பேர் இவ்வாறு குளிக்கச் சென்றுள்ளனர். குறித்த 8 பேரும் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த நிலையில் அவர்கள் அனைவரும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்தனர்.

இச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றிருந்த நிலையில் அவர்களில் ஐவரின் சடலம் பின்னர் மீட்கப்பட்டிருந்தது.

நாத்தாண்டியா பகுதியில் இருந்து வேன் ஒன்றில் வந்தவர்களே இவ்வாறு ஆற்றில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் ஐவர் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

இந்த மீட்புப் பணியில் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் இணைந்துள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

நேற்று இரவுவரை 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 3 பெண்களின் சடலங்கள் எனவும் 2 ஆண்களின் சடலங்கள் எனவும் குறிப்பட்ட அவர் மிகுதி மூவரின் சடலத்தையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.