சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு, விஜேராம பகுதியிலுள்ள தொலைத்தொடர்பு நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தைப் போன்ற பாணியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இரவுநேரங்களில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதில் என்ன சுவாரஸ்யமான விடயமெனில், கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் அங்கிருந்து பணத்தை திருடாது செல்கின்றதாகவும் கொள்ளையடிக்கப்பட்ட நிலையங்களில் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நல்லிரவில் முகங்களை மூடியவாறு தொலைத்தொடர்பு நிலையங்களுக்குள் செல்லும் கொள்ளையர்கள் இவ்வாறு பணத்தை வைத்துவிட்டுச் செல்லும் விதம், கொள்ளையடிக்கும் காட்சி போன்றன கிடைக்கப்பெற்ற சி.சி.ரி.வி. காணொளிகளில் ஒரு விதத்தில் பதிவாகியிருப்பதால், இவ்வாறான கொள்ளை நடவடிக்கை ஒரு குழுவினரின்  செயற்பாடாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு கொள்ளையில் ஈடுபடும்  கொள்ளையர்கள் அங்கு என்னத்தை கொள்ளையடிக்கின்றனரென பொலிஸார் ஆராய்வதுடன் கொள்ளையர்களை கைதுசெய்வதற்கு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.