கெக்கிராவ, மடாட்டுகம பகுதியில் உள்ள சிங்கள பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி கற்ற மாணவி திடீரென்று வாந்தி எடுத்துள்ளார். காரணம் தொடர்ந்து மூன்று நாள் உணவு உண்ணவில்லை. ஒரு நாள் ஒரு தடவை உணவு உட்கொண்டுள்ளார். அதனால் பசி மயக்கத்தால் வாந்தி எடுத்துள்ளார்.
பின்னர் அதிபருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவி தொடர்ந்து மூன்று நாள் வாந்தி எடுத்துள்ளார். இதனை அவதானித்த அதிபர் மாணவி கர்ப்பமாக இருப்பதாக சக மாணவிகளின் கதையை கேட்டு வைத்திய பரிசோதனைகள் இன்றி விடுகை பத்திரத்தையும் கையோடு வழங்கி அவரை பாடசாலையை விட்டு உடனடியாக விலக்கியுள்ளார்.
பின்னர் பெற்றோர் அவரை தம்புள்ள வைத்தியசாலையில் சேர்த்து பரிசோதித்த பின்பு அவர் கர்ப்பம் இல்லையென்றும் தொட ர்ச்சியான பட்டினியும் உணவு இன்மையும் காரணமாகவே வாந்தி எடுத்துள்ளதாக வைத்திய அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன. அதிபரின் முட்டாள்த்தனமான பிழையான அவதானத்தால் மாணவிக்கு கெட்டபெயர் ஏற்பட்டதாகவும் பாடசாலைக்கும் சமூகத்துக்கும் முகம்கொடுக்க இயலாமல் வெட்கப்பட்டு பிள்ளை தற்கொலைக்கு முயற்சித்துள்ளமையும் மிகவும் வேதனைக்குரியதே. இப்போது அவர் தம்புள்ள வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெறுகிறார்.
இப்போதும் அந்தக் குடும்பம் உணவின்றி பெரும் கஷ்டப்படுகின்றது.
கெக்கிராவ மடாட்டுகமவில் கடந்த மாதம் தரம் பத்தில் கல்வி கற்ற மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடுத்ததை தொடர்ந்து அவளை அப் பாடசாலையின் பெண் அதிபர் கர்ப்பமுற்றிருக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில் பாடசாலையை விட்டு விலக்கியுள்ளார். இதனால் இதுவரை பிள்ளை பாடசாலை செல்லவில்லை. மனித உரிமை ஆணைக்குழுவும் அவர்களை கொழும்புக்கு வருமாறு அழைத்துள்ளது. ஆனால் இந்த ஏழைக்குடும்பத்துக்கு கொழும்பு செல்லவும் பணமில்லை. கடன் வாங்கித்தான் ஆணைக்குழுவுக்கு செல்ல வேண்டும்.ஆணைக்குழு இவர்களின் நிலைமையைப்பாராது விசாரணைக்காக மட்டும் அழைத்துள்ளது. 1940 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தப் பிள்ளையின் பெற்றோர் வாழ்நாளில் கொழும்புக்கே போகவில்லை. இவர்களால் நலிவுற்ற இவ் ஏழைகளால் எப்படி கொழும்பை அடைவது? இந்த மனித உரிமை அலுவலகத்தை தேடிக் கண்டுபிடிப்பது சாத்தியமா?
இவ்விடத்தில்தான் ஜோக்கர் படத்தின் சில வசனங்கள் ஞாபகத்துக்கு வருகின்றது. பாதிக்கப்பட்ட பிள்ளை இன்னும் பாடசாலை சேரவில்லை. வறுமையும் சமூகத்தின் சமத்துவமற்ற நிலையுமே இந்த அதிபரின் செயற்பாட்டுக்குக் காரணம். பெண் என்பவள் தாய்தானே. இந்த அதிபர் ஒரு பெண். வயதில் சிந்தனையில் முதிர்ச்சி அடைந்த இவர் வாந்தி எடுப்பது கர்ப்பத்துக்குத்தானே என்ற அடிநிலை சிந்தையுடன் இருந்துள்ளார். மாணவியின் குடும்பம் பல அசெளகரியத்தை சந்திக்கிறது. இவர்களுக்கு குடிநீர் வசதி இல்லை. அடுத்த வீட்டில்தான் கிணற்றில் தண்ணீர் எடுக்கிறார்கள். குளிக்க ஒரு கிலோமீற்றர் நடந்து போக வேண்டும். வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டு வறுமைக்கோட்டை முகத்திலே சுமக்கிறார்கள். வயதுபோன பெற்றோர் அன்றன்று கூலி வேலைக்குப் போகிறார்கள். சரியாக முடித்துக்கொடுக்காத அரைகுறை சமுர்த்தி வீட்டிலே வசிக்கிறார்கள்.
அதிபரின் செயலால் பிள்ளையின் கற்றல் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மிகவும் ஏழ்மையான குடும்பம். தினமும் மன உளைச்சலை சந்தித்துள்ளனர். இது தொடர்பில் உயர்மட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். அதிபருக்கு எதிராக வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
"புத்தர் சொன்னது போல் தனக்கு வரும்வரைதான் எல்லாம் வேடிக்கை "என்றாகிவிட்டது. அதிகாரம் படைத்த வசதி படைத்த சமூகத்தில் இந்த அதிபர் ஒரு பிள்ளைக்கு எதிராக உடனடியாக இப்படியொரு முடிவை எடுத்து அதன் பின் விளைவு தெரியாது பாடசாலையை விட்டு நீக்குவாரா?இதை தனது மகளாக இருப்பின் செய்வாரா? பிள்ளைக்கு கல்வி தொடர்ந்து கிட்டவேண்டும். அவர்களின் வாழ்க்கை மேம்படவேண்டும். நிச்சயம் அவை நடக்கும்.
ஒரு முள் கூட காலில் குத்தி தான் முள் இருக்கிறேன் என்பதை சொல்ல முனைகிறது. நாம் அதை விட சொல்ல முனைய வேண் டும். இவ் வீட்டிற்கு எம்மை அழைத்துச் சென்ற பத்திரிகையாளருக்கும் மிகவும் நலிவுற்றவர்களின் துன்பத்தை இனம்கண்டமைக்கும் தொடர்ந்து வேலை செய்தமைக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் சேரட்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM