நியூ­ஸி­லாந்து அணிக்­கெ­தி­ரான மூன்று போட்­டிகள் கொண்ட இரு­ப ­துக்கு 20 கிரிக்கெட் தொடரில் முதல் வெற்­றியை பதிவு செய்த இந்­தியா அதே உத்­வே­கத்­துடன் இன்­றைய ஆட்­டத்­திலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்­வத்தில் உள்­ளது.

வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தி யாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 

இதில் ஏற்கனவே நடைபெற்ற 3 போட்டி கள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2–-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இ–20 தொடரின் முதல் போட்டி யில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டா­வது போட்டி இன்று ராஜ்­கோட்டில் இரவு 7 மணிக்கு தொடங்­கு­கி­றது. இரு­ப­துக்கு 20 தொடரை தக்க வைத்­துக்­கொள்ள நியூ­ஸி­லாந்து இந்தப் போட்­டியில் கட்­டாயம் வெற்­றி­பெற்றே ஆக வேண்டும்.