கடந்த காலத்தில் சட்­ட­வி­ரோ­த­மாக செயற்­பட்­ட­வர்­க­ளுக்கு  எதி­ராக விரைவில் சட்­டத்தை நிலை­நாட்­டுவோம். அத்­துடன் நாங்கள் வழக்கு நட­வ­டிக்­கை­களின் கோப்­பு­களை மறைக்­க­மாட்டோம் என நீதி மற்றும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார்.

இரத்­தி­ன­புரி, பலாங்­கொடை பிர­தே­சத் தில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில்,

ஆரம்ப நட­வ­டிக்­கை­யாக நாட்டில் சுதந்­தி­ரத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாக 2015 ஜன­வரி 8ஆம் திகதி மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்தோம்.  அத்­துடன் 19ஆம் திருத்­தச்­சட்­டத்­தி­னூ­டாக ஊடக சுதந்­திரம், நீதி­மன்ற சுயா­தீ­னத்­தன்மை, ஜன­நா­யக உரிமை மற்றும் அரச சேவையின் சுதந்­திரம் என்­ப­வற்றை மேற்­கொள்ள முடி­யு­மா­கி­யுள்­ளது. இன்று யார் வேண்­டு­மா­னாலும் வீதிக்­கி­றங்கி போரா­டி­னாலும் அதற்கு சுதந்­திரம் வழங்­கி­யி­ருப்­பது ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் என்­பதை மறக்­கக்­கூ­டாது.

கடந்த காலத்தில் போராட்டம் மேற்­கொண்­ட­வர்கள் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் செய்து கொலை செய்­தார்கள். மீன­வர்­களின் நிவா­ர­ணங்­களை இல்­லா­ம­லாக்க வேண்டாம் என தெரி­வித்து சிலாபம் மக்கள் வீதிக்­கி­றங்­கி­ய­போது அன்­டனி பெர்­னாண்­டோவுக்கு துப்­பாக்­கி­யி­னால் பதிலளிக்­கப்­பட்­டது. ஆடைத் தொழிற்­சாலை தொழி­லா­ளர்­க­ளுக்கும் துப்­பாக்­கி­யி­னால் பதி­ல­ளித்­தார்கள். ரொஷான் ஷானக்க கொலை செய்­யப்­பட்டார். அதே­போன்று ரது­பஸ்­வ­லவில் நீருக்கு இரசா­யன பொருட்கள் கலக்­கப்­ப­டு­வ­தாக தெரி­வித்­த­போது ரவை­க­ளி­னால் பதி­ல­ளித்­தார்கள். ஊட­க­வி­ய­லா­ளர்­களை கொலை செய்­தார்கள். இவ்­வா­றான சம்­ப­வங்­க­ளுடன் தொடர்புபட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக சட்­டத்தை நிலை­நாட்ட விரை­வாக நட­வ­டிக்கை எடுப்போம். இவ்­வாறு இருந்த நாட்­டில்தான் இன்று அனை­வரும் அவர்­க­ளுக்கு தேவை­யான முறையில் நாளாந்தம் போராட்­டங்­களை மேற்­கொள்ளும் உரி­மையை இந்த அர­சாங்கம் பெற்­றுக்­கொ­டுத்­துள்­ளது.

அத்­துடன் நாங்கள் சர்­வ­தே­சத்­துக்கு நல்­ல­தொரு அறி­வித்­தலை கொடுத்­தி­ருக்­கின்றோம். எம்மை சந்­திக்­க­வரும் சர்­வ­தேச பிர­தி­நி­திகள், சுதந்­தி­ரத்­துக்­காக நாங்கள் மேற்­கொண்ட நட­வ­டிக்­கைகள் குறித்து கதைக்­கின்­றனர். மேலும் மஹிந்த ராஜபக் ஷ விருப்­பத்­துடன் தேர்­த­லுக்கு செல்­ல­வில்லை. 2014 ஆம் ஆண்டு நாடு நிதி இல்­லாமல் நெருக்­க­டியை சந்­தித்­தது. அதற்கு முகம்­கொ­டுக்க வழி இல்­லா­மலேயே தேர்­த­லுக்கு சென்றார். எந்த நாடும் எங்­களை கண்­டு­கொள்­ள­வில்லை. பொது­ந­ல­வாய நாடு­களின் மாநாட்டை எமது நாட்டில் நடத்­தும்­போது, எதிர்க்­கட்சித்தலை­வ­ராக இருந்த ரணில் விக்­கிர­ம­சிங்க அந்த மாநாட்­டுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­தால்தான்  மாநாட்டை வெற்­றி­க­ர­மாக்­கிக்­கொள்ள முடிந்­தது. கற்­கா­லத்தை  நோக்­கிச்­சென்று கொண்­டி­ருந்த நாட்­டைத்தான் நாங்கள் 2015 ஆம் ஆண்டு மாற்­றி­ய­மைத்தோம்.

எனவே இன்று சுதந்­தி­ரத்தை உறுதிப்

படுத்தி சிறந்த முறையில் வாழும் உரி

மையை பெற்றுக்கொடுத்திருக்கின்றோம்.வழக்கு நடவடிக்கைகளின் கோப்புகளை

நாம் மறைக்கவில்லை  ஊடகவிய லாளர் களை கொலைசெய்யவில்லை ஊழல் மோச

டிகளை நிறுத்தியிருக்கின்றோம். தற்போது நாம் செய்ய வேண்டியிருப்பது மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுப்பதாகும் என்றார்.