ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் ஈராக்­கிய மொசூல் நகரில் மோதல்கள் இடம்­பெற்ற போது குறைந்­தது 741   பொது­மக்­களை மர­ண­தண்­ட­னையை ஒத்த தண்­ட­னையை நிறை­வேற்றிக் கொன்­றுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சபை தெரி­விக்­கி­றது.

 ஈராக்­கிற்­கான ஐக்­கிய நாடுகள்  உதவித் திட்டம் மற்றும் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் உயர்ஸ்­தா­னி­க­ரா­லயம் என்­ப­வற்றால் நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­படி தகவல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

மொசூல் நக­ரி­லான மோதலின் போது அங்­கி­ருந்து தப்பிச் செல்ல முயன்ற  மக்­களை  கடத்திச் சென்று  மனிதக் கேட­யங்­க­ளாக பிடித்­து­வைத்­தி­ருந்த ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் அவர்­களில் பலரை கொன்­றுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள்  மனித உரி­மைகள் தலைவர் ஸெய்த் ராத்  ஹுஸைன் கூறினார். அதே­ச­மயம் மேற்­படி மோதலின் போது ஈராக்­கிய படை­யி­னரால்  மேற்­கொள்­ளப்­பட்ட வன்­மு­றைகள் குறித்தும்  விசா­ர­ணையை முன்­னெ­டுக்க அவர் அழைப்பு விடுத்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்­தி­லி­ருந்து  இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை இடம்­பெற்ற கடு­மை­யான மோதலின் போது ஈராக்­கிய இரா­ணு­வத்­தி­னதும் அமெ­ரிக்கா .தலை­மை­யி­லான படை­யி­ன­ரதும் வான் தாக்­கு­தல்­களில் மேலும் 461  பொது­மக்கள்  உயி­ரி­ழந்­துள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ள ஐக்­கிய நாடுகள் சபை,  அந்தப் பிராந்­தி­யத்­தி­லான இரா­ணுவ நட­வ­டிக்­கை­களின் போது மொத்தம் 2,521  பொது­மக்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­துடன்  1,673  பேர் காய­ம­டைந்­துள்­ள­தாக  தெரி­விக்­கி­றது.