முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்திடமுள்ள 111 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்காக 148 மில்லியன் ரூபா இராணுவத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ள நிலையில் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் அக்காணிகள் பொதுமக்களிடத்தில் கையளிக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக வாழ்வாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு சுயதொழில் உபகரணங்களைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை வவுனியா பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சித்திட்டம் மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டதுடன் முதற்கட்டமாக மடு பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பின்னர் மன்னார் பிரதேச செயலகத்திலும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலும் அமுல்படுத்தப்பட்டது.
மன்னார் மாவட்டத்தின் 500 பயனாளிகளுக்கு 50 மில்லியன் ரூபாவும் முல்லைத்தீவு மாவட்டத்தின் 600 குடும்பங்களுக்கு 60 மில்லியன் ரூபா சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினால் செலவிடப்பட்டது. அதன்படி 1,100 குடும்பங்களுக்கு 110 மில்லியன் ரூபாவும் அமைச்சினால் செலவிடப்பட்டுள்ளது.
விவசாயம், மிருக வளர்ப்பு, சுயதொழில், சிறிய தொழில் முயற்சிகள் என்பவற்றை ஆரம்பிப்பதற்காக இந்த உதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் பயனாளிக் குடும்பம் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா தொகை செலவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், மீள்குடியேற்ற அமைச்சு வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களுக்கும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் முகமாக பல்வேறான திட்டங்களை கடந்த இரண்டரை வருட காலமாக செயல்படுத்தி வருகின்றது. இவ்வருடம் முல்லைத்தீவு மாவட்டத்திற்காக எமது அமைச்சினால் பல்வேறு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இடம்பெயர்ந்தோர்களில் 578 குடும்பங்களுக்காக வீடுகளை அமைக்க 463 மில்லியன் ரூபாவும், பகுதி சேதமடைந்த வீடுகளை சீரமைப்பதற்காக 43 குடும்பங்களுக்கு 10 மில்லியன் ரூபாவும், பாரிய அளவிலான சுகாதார துப்புரவு திட்டத்துக்காக 330 குடும்பங்களுக்கு 20 மில்லியன் ரூபாவும் குடிநீர் திட்டத்துக்கு 120 குடும்பங்களுக்காக 15 மில்லியன் ரூபாவும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலுக்காக 33 குடும்பங்களுக்கு 30 மில்லியன் ரூபாவும், கல்வித்துறை முன்னேற்றத்திற்கான திட்டங்களுக்காக 59 குடும்பங்களுக்கு 50 மில்லியன் ரூபாவும் வாழ்வாதார உதவித் திட்டங்களுக்காக 600 குடும்பங்களுக்காக 60 மில்லியன் ரூபாவும் சிறு நீர்த்தாங்கிகள் அமைப்பதற்கு 42 குடும்பங்களுக்காக 100 மில்லியன் ரூபாவும் சிகிச்சை நிலையமொன்றை குடும்பமொன்றுக்கு அமைத்துக்கொடுப்பதற்காக 30 மில்லியன் ரூபாவும் இலவச மின்சார இணைப்பு வழங்கலுக்காக 1250 குடும்பங்களுக்கு 25 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளன.
இம்மாவட்டத்தின் வாழ்வாதார உதவிகளை பெறும் பயனாளிகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்குவதும் எமது நோக்கமாகும். இவ் உதவிகளை பெற்றுக்கொள்ளும் நீங்கள் அதை சரியான முறையில் பயன்படுத்தி உங்களது மாதாந்த வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். ஒவ்ெவாருவருடமும் இவ் வகையான திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்பதை அறியத்தருவதுடன் நீங்கள் அனைவரும் எனக்கும் எமது அரசிற்கும் வழங்கும் ஒத்துழைப்பிற்கு உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் பகுதியில் நீண்டகால கோரிக்கையான கேப்பாபுலவு காணி விடுவிப்பு எமது முயற்சியினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. முதல் கட்டமாக 243 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதுடன் எமது அமைச்சின் 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் 189 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்டமாக 111 ஏக்கர் காணியை விடுவிக்க இக் காணிக்குள் உள்ள இராணுவத்தினரின் பாதுகாப்பு முகாம்களை அகற்றி மாற்றிடத்தில் அமைத்திட 148 மில்லியன் ரூபா தேவை என்பதை அறியத்தந்ததன் நிமித்தம் இத்தொகையை அமைச்சரவை பத்திரம் ஒன்றின் மூலம் பெற்றுத்தர நான் இணக்கம் தெரிவித்திருந்தேன். இதன்படி 148 மில்லியன் ரூபா இராணுவத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி இத்தொகை வழங்கப்பட்டதற்கு இணங்க 111 ஏக்கர் காணியை பொதுமக்களுக்கு டிசம்பர் மாதத்திற்குள் வழங்குவதற்கான நடைமுறை வேலைத்திட்டங்களை இராணுவத் தரப்பு மேற்கொண்டுள்ளது என்பதனை இத் தருணத்தில் அறியத்தருகின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM