மினுவாங்கொடை, கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்துச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

டிரக் வண்டியொன்று மின்மாற்றி பொருத்தப்பட்டிருந்த மின்கம்பந்துடன் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.