நிரந்தர வீடற்ற மீனவர்களுக்கும்,  முழுமையாக பூரணப்படுத்தப்படாத வீடுகளையுடைய மீனவ குடும்பங்களுக்கும் நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் மீன் பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தன் கீழ், முழுமையாக அமைக்கப்படவுள்ள வீடுகளுக்கு மூன்றரை இலட்சம் ரூபாய் நிதியுதவியும், பகுதியளவில் பூரணப்படுத்தப்பட்ட வீடுகளை பூரணப்படுத்துவதற்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நோனாகம - கலாசார நிலையத்தில் இதற்கான நிதியுதவி வழங்கும் ஆரம்ப நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.