(ப.பன்னீர்செல்வம்)

பெளத்த குருமார் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் மகாநாயக தேரர்களின் முடிவே இறுதி முடிவாகும். இவ் விடயத்தில் அரசாங்கம் தலையிடாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வாத்துவ தல்பிட்டிய போதிராஜா ரமயவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.

பிரதமர் இங்கு  மேலும் தெரிவித்திருப்பதாவது,

 பெளத்த குருமார் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் மகாநாயக தேரர்களின் முடிவே இறுதி முடிவாகும். இவ் விடயத்தில் அரசாங்கம் தலையிடாது. 

மகா நாயக்க தேரர்கள் மற்றும் பௌத்த குருமார் அனைவரதும் கருத்துக்கள் பெறப்படும்.  தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கப்பட மாட்டாது. 

இலங்கையில் பெளத்த குருமாரை பலப்படுத்துவதே எமது கொள்கையாகும். பௌத்த குருமார் தொடர்பான ஒழுக்கச் சட்டமூலம் சபாநாயகர் மற்றும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோரது தனிப்பட்ட பிரேரணையென சமூகத்தில் கருத்தொன்று உள்ளது. இது பிழையான கருத்தாகும்.

இதேவேளை, பௌத்த மதம் உட்பட மத விடயங்களில் அரசு தலையிட முடியாது.  அதில் மதத் தலைவர்களுடன் கலந்தாலோசித்தே அவர்களது தீர்வின் பிரகாரமே முடிவெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.