விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் `மெர்சல்' படம் விமர்சனங்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அதன் தெலுங்கு பதிப்பிற்கு நீடித்த வந்த தடை தற்போது நீங்கியிருக்கிறது.

விஜய் நடித்து வெளியாகி இருக்கும் ‘மெர்சல்’ படம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அரசியல் ரீதியான ஆதரவு மற்றும் எதிர்ப்பின் காரணமாக இந்திய அளவில் பேசப்பட்டது.

விமர்சனங்களுக்கு இடையே `மெர்சல்' படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இது ஒருபுறம் இருக்க `மெர்சல்' படத்தின் தெலுங்கு பதிப்பான `அதிரிந்தி' படத்திற்கு சென்சார் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் படம் தீபாவளிக்கு ரிலீசாகவில்லை. 

`மெர்சல்' பிரச்சனையால் அதிரிந்தி படத்திற்கு சென்சார் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், `அதிரிந்தி' படத்திற்கு தணிக்கைகுழு `யு/ஏ' சான்றிதழ் வழங்கி இருக்கிறது. இதனை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவம் சார்பில் ஹேமா ருக்மணி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படம் விரைவில் ரிலீசாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். 

அட்லி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா, எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.