யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி மாவட்ட பாட­சா­லைகள் அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்­று­வரும் மைலோ கிண்ண கால்­பந்­தாட்டத் தொடர் தற்­போது இறுதிக் கட்­டத்தை எட்­டி­யுள்­ளது.

5ஆவது மைலோ கிண்ண கால்­பந்து போட்­டி­களின் ஓர் அங்­க­மாக 14 மற்றும் 16 வய­திற்­குட்­பட்ட யாழ்., கிளி­நொச்சி மாவட்ட பாட­சாலை அணி­க­ளுக்­கி­டை­யி­லான போட்டித் தொடரின் 16 வய­திற்­குட்­பட்­டோ­ருக்­கான இறுதிப் போட்­டிக்கு சென்.பற்றிக்ஸ் கல்­லூரி அணியும் சென்.ஹென்றிஸ் கல்­லூரி அணியும் தெரி­வா­கி­யுள்­ளன.

யாழ்., கிளி­நொச்சி மாவட்ட பாட­சாலை அணி­க­ளுக்­கி­டை­யி­லான குறித்த சுற்­றுத்தொ­டரின் அரை­யி­றுதிப் போட்­டிகள் நேற்றுமுன்தினம் யாழ்ப்­பாணம் துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­றன.  

இதில் நடை­பெற்ற முத­லா­வது அரை­யி­று­தியில் சென்.பற்றிக்ஸ் மற்றும் நாவாந்­துறை ரோமன் கத்­தோ­லிக்க அர­சினர் தமிழ் கலவன் பாட­சாலை அணிகள் மோதி­யி­ருந்­தன இப்­போட்­டியில், 3–0 என்ற கோல்கள் கணக்கில் சென். பற்றிக்ஸ் வெற்­றி­பெற்று இறு­திக்குள் நுழைந்­தது. 

அதே­வேளை இரண்­டா­வது அரை­யி­று­தியில் கொற்­றா­வத்தை அமெ­ரிக்க மிஷன் கல்­லூரி அணி­யினை எதிர்த்து மோதிய சென்.ஹென்றிஸ் கல்­லூரி அணி 6–0 என்ற கோல்கள் கணக்கில் இலகு வெற்­றி­பெற்று இறுதிப் போட்­டிக்குள் நுழைந்தது.

இறுதிப்போட்டி நாளை சனிக்கிழமை யாழ். துரையப்பா விளையாட்டரங் கில் நடைபெறவுள்ளது.