நாட்டில் நல்­லி­ணக்­கத்தை நிலை­நாட்ட அர­சாங்­கத்­தினால் மாத்­திரம் முடி­யாது. இதற்­காக சகல இன மக்­களும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­ட­வேண்டும். அத்­துடன் 2013ஆம் ஆண்­டில் நாட்டில் மத­வாதம் மிகத்­தீ­வி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டது. பௌத்த துற­விகள் என்று சொல்­லக்­கூ­டி­ய­வர்­களே நாட்டில் பல்­வேறு இடங்­களில் இன­வா­தத்தை பரப்பி வரு­கின்­றனர் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க அலு­வ­ல­கத்தின் தலை­வ­ரு­மான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க கவலை தெரி­வித்தார்.

தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும்  நல்­லி­ணக்க அலு­வ­ல­கமும் தேசிய ஐக்­கி­யத்­திற்­கான பாக்கீர் மாக்கார் நிலை­யமும் இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த "ஒற்­று­மையில் வேற்­று­மையே தேசத்தின் பலம்" என்னும் தொனிப்­பொ­ருளில் அகில இலங்கை ரீதி­யி­ல் பாடசாலை மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்­டுரை மற்றும் சித்­தி­ரப்­போட்­டியில் வெற்­றி­பெற்ற மாண­வர்­க­ளுக்கு சான்­றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று முன்­தினம் பண்­டாரநாயக்க ஞாப­கார்த்த சர்வதேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இந்நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். 

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், வேற்­று­மையில் ஒற்­றுமை காண்­பதும் சக­வாழ்வும் எமது நாட்­டிற்கு அத்­தி­யா­வ­சி­ய­­மான விட­யங்கள். எமது நாட்டில் வாழும் பல்­லின மக்­க­ளுக்­கி­டையில் சமா­தா­னத்தை கட்­டி­யெ­ழுப்ப நான் என் வாழ் நாளில்  அரை­வாசிப் பகு­தி­யையும் கழித்­துள்ளேன். பல்­வேறு அர்ப்­ப­ணிப்­புக்­களை செய்­துள்ளேன். 

எமது நாடு சிறி­ய­தொரு வள­மா­ன­தொரு நாடு. கலா­சா­ரத்­திலும் நாக­ரி­கத்­திலும் உன்­ன­த­மா­ன­தொரு வர­லாற்றை கொண்­டுள்­ளது. 2000 ஆண்டுகளுக்கு அதிக காலம் தொட்டு சிங்­கள, முஸ்லிம், தமிழ் மக்கள் இங்கு வாழ்ந்­துள்­ளார்கள். அதன் பின்னர் பல்­வேறு இனங்கள் இங்கு வந்­துள்­ளன. பல தசாப்­தங்­க­ளாக எவ்­வித பிள­வு­களும் இன்றி நாம் ஒற்­று­மை­யாக வாழ்ந்­த­தற்­கான வரலாற்று ஆதா­ரங்கள் உள்­ளன. 

தென் இந்­தி­யாவில் பல்­வேறு ராஜ்­ஜி­யங்கள் காணப்­பட்­டன. அங்­கி­ருந்து பல்வேறு அர­சர்­களும் இங்கு வந்து எமது நாட்டை கைப்­பற்­றப்­பார்த்­தார்கள். ஆனால் ஆக்­கி­ர­மிப்பு சக்­தி­க­ளி­ட­மி­ருந்து நாட்டை காப்­பாற்ற நாம் எல்­லோரும் போரா­டி­யுள்ளோம். ஒரு காலத்தில் எமது நாட்டில் 3 ராஜ்­ஜி­யங்கள் காணப்­பட்­டன. ஒன்­று­பட்ட தேசம் 3 பகு­தி­க­ளாக பிள­வு­பட்­டி­ருந்­தது. அதன் பின்னர் வெளி­நாட்டு சக்­திகள் எமது நாட்டை ஆண்­டன. எல்லா இனத்­த­வர்­களும் ஒன்­று­பட்டு சுதந்­தி­ரத்தை வென்­றெ­டுத்­தார்கள். ஆனால் சுதந்­தி­ரத்­திற்கு பிந்­திய காலத்தில் அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக மக்­க­ளுக்கு மத்­தியில் பிள­வுகள் அதி­க­ரிக்­க­லா­யின. பிற்­பட்ட காலத்தில் கடும்­போக்­கு­வாத தீவிர மத­வாத சக்­தி­களின் தாக்கம் அதி­க­ரித்­தது. இதன் விளை­வாக 30 வருட யுத்­தமும் வெடித்­தது. சந்­தர்ப்­ப­வாத அர­சி­யலை முன்­னி­லைப்­ப­டுத்­தியே இன­வாதம் அரங்­கேற்­றப்­ப­டு­கின்­றது.

என்­றாலும் இந்­நாட்டில் பெரும்­பான்­மை­யின மக்கள் இதற்கு எதி­ரா­கவே இருக்­கின்­றனர். 2013ஆம் ஆண்­டி­லேயே மத­வாதம் மிகத்­தீ­வி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டது. பௌத்த துற­விகள் என்று சொல்­லக்­கூ­டி­ய­வர்கள் அதி­க­ள­வி­லானோர் நாட்டில் பல்­வேறு இடங்­களில் இன­வா­தத்தை பரப்பி வரு­கின்­றனர். என்­றாலும் பெரும்­பா­லான தேரர்கள் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்பும் செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுக்­கி­றார்கள். ஆனால் அவை ஊட­கங்­களில் வரு­வ­தில்லை. சிங்­கப்­பூரின் பிர­தமர் லீ குவான் இலங்­கையை முன்­னு­தா­ர­ண­மாக கொண்டு அன்று அந்­நாட்டை கட்­டி­யெ­ழுப்­பினார். ஆனால் இன்று எமது நாடு மத­வாத கடும்­போக்­கு­வாத அர­சி­யலால்  இருள் யுகத்தை நோக்கிச் சென்­றுள்­ளது. 

அதனை மாற்­றி­ய­மைக்க தற்­போ­தைய அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. புதி­தாக இதற்கு அமைச்­சுக்­களும் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் தமிழ், முஸ்லிம் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற கட்­சிகள் எல்லாம் இன்று 70 வரு­டங்­களின் பின்னர் ஒன்­று­பட்­டுள்­ளன. இதுவே நல்­லி­ணக்­கத்­திற்­கான அடித்­தளம். எனவே நாம் எல்­லோரும் ஒன்று பட்டு முன்­செல்ல வேண்டும். எமது நாட்­டிற்கு சமூக, பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அவ­சியம். முன்­னேற்­ற­க­ர­மான கலா­சார முறைகள் அவ­சியம். இந்­நி­லைக்கு செல்­வ­தற்கு வர­லாற்­றி­லி­ருந்து பாடம் கற்று செயற்­பட வேண்டும்.  அர­சாங்­கத்­திற்கு மாத்­திரம் இப்­ப­ணியை செய்ய முடி­யாது. தேசிய நல்­லி­ணக்க அலு­வ­லகம் இது தொடர்பில் பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. கடந்த 11 வருட காலமாக நாம் இதனை செயற்படுத்தி வருகின்றோம். 2 இலட்சத்திற்கும் அதிக மாணவர்கள் இதில் பிரயோசனம் பெற்றுள்ளனர். வடகிழக்கு பகுதிகளில் இதன் செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளோம். எனவே சகலரினதும் பங்குபற்றுதலும் ஒத்துழைப்பும் அவசியம். நாட்டின் பெரும்பாலான மக்கள் தேசிய நல்லிணக்கம் தேவையென கூறுகின்றார்கள். சிறியதொரு கூட்டத்தினர் மாத்திரமே இனவாதத்தை விதைக்கிறார்கள். நாம் எல்லோரும் ஒன்றுபட்டு முன்னேறிச்செல்ல வேண்டும் என அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.