அதிகரித்து வரும் பாதாள உலக கோஷ்டிகளின் மோதல் சம்பவங்களையடுத்து, இதுபோன்ற கோஷ்டிகளின் தலைவர்களைக் கைது செய்வதற்கு மூன்று விசேட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சர்வதேச பொலிஸ் நிறுவனமான ‘இன்டர்போல்’ உடன் இணைந்து இயங்கவுள்ளனர்.

பாதாள உலகக் கோஷ்டி மோதல்களில் கடந்த வாரம் மட்டும், பாடசாலை மாணவன் உட்பட நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

எனினும், இந்த கோஷ்டிகளின் தலைவர்கள் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இதையடுத்தே இன்டர்போலின் உதவியுடன் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் மூன்று விசேட குழுக்கள் இறங்கியுள்ளன.