யாழ்ப்பாணம், பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள உணவு கையாளும் நிலையங்கள், 2026.11.03 பருத்தித்துறை நகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தலைமையிலான குழுவினரால் திடீர் சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது, குறித்த உணவகங்களில் பல்வேறு சுகாதார விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டன. அவற்றுள், எலிகளின் நடமாட்டம் காணப்படும் இடங்களில் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தமை.
கழிவுநீரை வெளிச்சூழலில் வெளியேற்றி, காவிகளின் பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கியமை. நச்சுப் பதார்த்தங்கள் உணவுடன் கலப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்ட பிளாஸ்டிக் பாத்திரங்களில் சூடான உணவுப் பொருட்களைக் களஞ்சியப்படுத்தியமை.
றெஜிபோம் பெட்டிகளில் சூடான ரொட்டிகளைச் சேமித்து வைத்தமை. போன்ற பாரதூரமான சுகாதார விதிமுறை மீறல்கள் அவதானிக்கப்பட்டன.
இக்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பருத்தித்துறை நகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ப. தினேஸினால் குறித்த உணவகங்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
அவ்வழக்குகள் 05 ஆம் திகதி வியாரக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தினால் குறித்த உணவகங்களுக்கு முறையே ரூ. 40,000, ரூ. 30,000 மற்றும் ரூ. 10,000 என மொத்தமாக ரூ. 80,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் சுகாதாரத்தையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில், பருத்தித்துறை நகரசபையினால் இவ்வாறான சுகாதார விதிமுறை மீறல்களுக்கு எதிராக தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM