மிகவும் சிக்கலான கதாபாத்திரங்களை தெரிவு செய்து அதில் தன்னை நேர்த்தியாக பொருத்திக் கொண்டு துல்லியமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள், திரையுலக ஆர்வலர்கள் மற்றும் படைப்பாளிகளின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் சந்தோஷ் பிரதாப் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சிக்னல் அட் 11:30' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் மலர்விழி வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிக்னல் அட் 11:30' திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், பவ்யா தரிகா, பூஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனீஸ்காந்த், ஆரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ராஜாபட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'மெலோடி சாம்ராட்' டி. இமான் இசையமைத்திருக்கிறார்.
ஃபில் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்பிரமணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன் தயாரிப்பாளர் தனஞ்செயன் - இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார்- பேரரசு -சுபாஷ் கே. ராஜ், நடிகர் விதார்த் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '''திருவாளர் பஞ்சாங்கம்' படத்தை தொடர்ந்து எம்முடைய இயக்கத்தில் உருவாகி இருக்கும் இரண்டாவது திரைப்படம் 'சிக்னல் அட் 11.30'. எம்முடைய கனவுகள் நனவாகும் போது அதற்கு திரையுலகில் சாதனை படைத்தவர்கள் வாழ்த்து தெரிவிக்கும் போது உணர்ந்து அனுபவிக்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
இந்த திரைப்படத்தை முதன் முதலாக தயாரிப்பாளர் தனஞ்ஜெயனுக்கு திரையிட்டு காட்டினேன். அவரது ஆலோசனை எங்களுக்கு உதவிகரமாக இருந்தது. இந்தத் திரைப்படத்தில் பிரம்மாண்டம் மட்டும்தான் குறைவாக இருக்கும். ஆனால் இப்படத்தின் திரைக்கதை நிச்சயம் ரசிகர்களை கவரும்'' என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM