புதுமுக நடிகர் அண்ணாதுரை கதையின் நாயகனாக நடிக்கும் 'பேய் பிடிச்சிருக்கு' திரைப்படம் குடும்பத்துடன் கூடிய ஹாரர் திரில்லராக தயாராகி வருகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் இளவரசன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பேய் பிடிச்சிருக்கு' திரைப்படத்தில் அண்ணாதுரை, விஜயகணேஷ், சாரப்பாம்பு சுப்புராஜ், வெங்கடேஷ், துருவன் நரேஷ், மாஸ்டர் சரண்வாஷ், செல்வி முத்ரா, ஜெயந்தி மாலா, ஹெலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
நித்தின் மற்றும் அவரது குழுவினர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.
ஃபேமிலி ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரைட் ஃபிங்கர் மூவி கிரியேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சி. அண்ணாதுரை மற்றும் ராமஜெயம் அண்ணாதுரை ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்திருப்பதால் படத்தைப் பற்றி குறைந்தபட்ச எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM