பசில் ஜோசப் – எல்.கே. அக்ஷய் குமார் நடிக்கும் 'ராவடி' படத்தின் முதல் பாடல் வெளியீடு!

Published By: Digital Desk 2

05 Nov, 2026 | 04:55 PM
image

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான பசில் ஜோசப் 'சிறை' படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நடிகர் எல். கே .அக்ஷய் குமார் ஆகிய இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் 'ராவடி' திரைப்படத்தில் இடம் பெற்ற 'அட்ரா பரமா..' எனும் முதல் பாடலும் ,பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ராவடி' திரைப்படத்தில் பசில் ஜோசப், எல்.கே. அக்ஷய் குமார், ஜான் விஜய், ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன், அருணாச்சலேஸ்வரன், சத்யன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசைமமைத்திருக்கிறார். கொமர்ஷல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பொடி பொடியா அடிச்சது பொடியன் இல்ல பாத்துக்க.. பாத்துக்க..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் உதய் எழுத பின்னணி பாடகர் அறிவு பாடியிருக்கிறார்.

துள்ளல் இசை பாணியில் அமைந்திருக்கும் இந்தப் பாடல் இணையவாசிகளிடம் பெரும் ஆதரவையும், வரவேற்பையும் பெற்று இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விஜய் சேதுபதியின் 'இஞ்சி வெல்லம்' படத்தின்...

2026-11-12 15:43:17
news-image

ஆங்கில புத்தாண்டு நாளில் மீண்டும் வெளியாகிறது...

2026-11-12 15:42:06
news-image

200 கோடி ரூபாய் வசூல் கிளப்பில்...

2026-11-12 15:35:58
news-image

யோகி பாபு நடிக்கும் 'ஆன் ஆர்டினரி...

2026-11-12 15:10:29
news-image

காதலனை கரம்பிடித்த நடிகை பிரியா பவானி...

2026-11-12 12:24:45
news-image

கிரீஸில் கோலாகலமாக நடைபெற்றது அனிருத் -...

2026-11-12 11:11:46
news-image

இணையத்தை கலக்கும் நடிகை பிரியா பவானி...

2026-11-11 16:18:12
news-image

புதுமுக நடிகர் கலேஷ் ராமானந்த் நடிக்கும்...

2026-11-11 16:09:10
news-image

கிருஷ்ண பக்தியை விவரிக்கும் 'சரணாகதி' படத்தின்...

2026-11-11 15:59:28
news-image

இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட நடிகர்...

2026-11-11 15:58:59
news-image

நடிகர்கள் தனுஷ் - மம்முட்டி இணைந்து...

2026-11-10 16:31:13
news-image

நடிகர் திலீஷ் போத்தன் நடிக்கும் 'பௌமா'...

2026-11-10 16:29:55