தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களையும், கதைகளையும் தெரிவு செய்து திரையில் தனித்துவமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி, ரசிகர்களை மகிழ்விப்பதில் தன்னிகரற்று திகழும் நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'டெத் ரயில்வே' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக காணொளி ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது.
'யாத்திசை' திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'டெத் ரயில்வே' திரைப்படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, சேயோன், கிஷோர், பவானி ஸ்ரீ , ஷிவதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் அசோக் செல்வன் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.
ஆர் .சேது முருகவேல் ஜெகநாதன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு சர்தக் கல்யாணி மற்றும் ஏ சி சார்லஸ் ராஜ் ஆகியோர் இணைந்து இசையமைக்கிறார்கள். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் நடைபெற்ற வரலாற்று சம்பவங்களின் பின்னணியில் உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை ஜே கே பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜே. கமலக்கண்ணன் தயாரித்து வருகிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ':இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த 1944 ஆம் ஆண்டில், ஜப்பானிய படைகள் பர்மா வழியாக இந்தியாவை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருந்த காலகட்டத்தை... இப்படம் பின்னணியாக கொண்டுள்ளது.
இதில் இந்தியா தன்னுடைய சொந்த மண்ணில் சுதந்திர சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருந்த வேளையில், இந்திய ராணுவ வீரர்கள் தொலைதூரத்தில் எல்லைக்கு அருகில் வீரத்துடன் ஜப்பானிய படைகளை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தார்கள்.
இதை தேச பக்தியுடன் விவரிக்கும் படைப்பாக இப்படம் தயாராகிறது'' என்றார்
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக காணொளி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருந்தாலும்... ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதால் இந்த பிரத்யேக காணொளிக்கான வரவேற்பும், ஆதரவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM