சிறு தொழில்முனைவோருக்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் : மீரிகமவில் முதலாவது நிலையம் திறப்பு

Published By: Digital Desk 2

05 Nov, 2026 | 04:44 PM
image

(நமது நிருபர்)

நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில்முனைவோரை வலுவூட்டும் நோக்கில் சிறு உற்பத்தி நிலையங்களின் வலையமைப்பை (Mini Incubation Center Network) அமைக்கும் விசேட வேலைத்திட்டத்தை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு கடந்த 4ஆம் திகதி மீரிகம பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள 'விதாதா' வள நிலையத்தில் (Vidatha Resource Centre), விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தலைமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

போதிய வளங்கள் மற்றும் முறையான உட்கட்டமைப்பு வசதிகளின்றி தமது தொழில் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில்முனைவோருக்குத் தேவையான அத்தியாவசிய தொழில்நுட்ப வசதிகளையும் ஆதரவையும் வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான இலக்காகும்.

இத்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட 25 'விதாதா' வள நிலையங்கள் சிறு உற்பத்தி நிலையங்களாகத் தரமுயர்த்தப்படவுள்ளன.

இதன் மூலம் சுமார் 2,500 தொழில்முனைவோர் நேரடிப் பலன்களைப் பெறுவர் என எதிர்பார்க்கப்படுவதுடன், 2026ஆம் ஆண்டுக்காக இந்நடவடிக்கைக்கு 100.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீரிகமவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள முதலாவது நிலையத்தின் மூலம் குறிப்பாக உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோருக்குச் சுகாதாரமான முறையில் உணவுகளைத் தயாரித்தல், பொதியிடல் மற்றும் லேபள் இடுதல் ஆகியவற்றுக்குத் தேவையான நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் வசதிகளும் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.

இதன் மூலம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தை மேம்படுத்தி, சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு வழிவகுக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026 இறுதி காலாண்டில் மின் கட்டணத்தில்...

2026-11-11 17:41:14
news-image

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிச்சயம் இரத்துச்...

2026-11-11 22:41:08
news-image

காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் இயற்றப்படுவதை நாம் ஏற்பதில்லை...

2026-11-11 22:31:13
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி...

2026-11-11 17:27:27
news-image

2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அறிமுகமாகும் மெட்ரோ...

2026-11-11 17:23:45
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்க வரவு -...

2026-11-11 18:21:49
news-image

சவூதி நீதிமன்ற வழக்கிலிருந்து அனோஜன் சிவராசா...

2026-11-11 21:12:02
news-image

சஜித் பிரேமதாச விநியோகித்த பேருந்துகளுக்கு முறையாகச்...

2026-11-11 13:22:17
news-image

பொருளாதாரத் தோல்விகளை மூடிமறைக்க எதிர்க்கட்சிகளை முடக்கும்...

2026-11-11 17:51:02
news-image

2027 வரவு செலவுத் திட்டத்தை நலன்புரி...

2026-11-11 20:54:31
news-image

விசுவமடு மகாவித்தியால மைதானத்திற்கான சுற்றுவேலியை அமைத்துக்கொடுத்த...

2026-11-11 20:50:59
news-image

மலையக மக்களின் காணி, வீடமைப்பு உரிமைகளுக்காக ...

2026-11-11 18:22:24