சூரியசக்தித் துறைக்கு எதிரான அரசாங்க நடவடிக்கைகளைக் கண்டித்து நவம்பர் 7 கொழும்பில் போராட்டம்

Published By: Digital Desk 1

05 Nov, 2026 | 04:49 PM
image

(செ.கவிஷனா)

நாட்டில் நுகர்வோரின் மின்கட்டணத்தைக் குறைக்கக்கூடிய பிரதான வழியான சூரிய சக்தி கட்டமைப்புகளைத் திட்டமிட்டு முடக்கிவிட்டு, டீசல் மற்றும் நிலக்கரி மாஃபியாக்களுக்குச் சாதகமாக அரசாங்கம் முன்னெடுத்து வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்வரும் 7ஆம் திகதி கொழும்பில் மாபெரும் எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக புதிப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்தி முன்னணியின் தலைவர் எச்.ஜீ.ருவன் சாமர தெரிவித்தார்.

கூரை மீது சூரிய சக்தி மின் கட்டமைப்புகளை அமைப்பது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துக்களுக்குக் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் மின்சாரக் கட்டணங்களைக் கணிசமாகக் குறைப்பதற்கான ஒரே சாத்தியமான மாற்றுவழி சூரிய எரிசக்தி மட்டுமே ஆகும். அந்த வாய்ப்புகளை முடக்கிவிட்டு மக்களின் வரிப்பணத்தில் டீசல் மற்றும் நிலக்கரி மாபியாக்களுக்கு இடமளிக்கப்பட்டு வருகிறது.

டீசல் மின் உற்பத்தி நிலையங்களுடன் எவ்வித ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவில்லை என அமைச்சர் முன்னர் கூறியிருந்த போதிலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் 350 மெகாவோல்ட் டீசல் மின் நிலையங்களுக்கான கொள்வனவு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் இத்தகைய டீசல் நிலையங்களுக்குக் பாரிய கொள்ளளவு கட்டணம் செலுத்தப்படவேண்டியுள்ளது. ஆனால் சூரிய சக்தி அமைப்புகளுக்கு அவ்வாறான கட்டணங்கள் எதுவும் செலுத்தப்படுவதில்லை.

சாதாரண மக்கள் தமது கூரைகளில் சோலார் அமைப்புகளை நிறுவுவதற்கு மின் கட்டமைப்பு இடமில்லை எனக் கூறி மின்சார சபை போன்ற நிறுவனங்கள் மறுத்து வருகின்றன.

அத்துடன், மக்கள் அமைக்கும் முறைமைகளுக்கும் துணைக் பேட்டரி முறைமைகள் உட்பட அதிகளவில் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த தேர்தலில் அரசாங்கத்திற்கு உதவிய முக்கிய இரண்டு பெரு நிறுவனங்களுக்கு மட்டும் எவ்வித வரியுமின்றி சோலார் மற்றும் பேட்டரி சேமிப்பு அமைப்புகளை அமைத்துக்கொள்ள முழுமையான அனுமதி வழங்கப்பட்டு, புதியதொரு எரிசக்தி ஏகபோகம் உருவாக்கப்பட்டு வருகிறது.

வாக்குறுதிகளை மீறி மின்கட்டண அதிகரிப்பு மின்கட்டணங்களை மூன்றில் இரண்டு பங்காகக் குறைப்பதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு நாள்தோறும் மின்கட்டணங்களை உயர்த்தி வருகின்றனர்.

மேலும் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன. மேலும், சூரிய சக்தித் துறையில் தற்போது நடைமுறையிலுள்ள 27 மற்றும் 37 ஒப்பந்தங்களை இரத்து செய்வதற்கும் திட்டமிடப்பட்டு வருகின்றனர்.

6 இலட்சம் கூரைகளில் சோலார் அமைப்புகளைப் பொருத்துவதாக வாக்குறுதியளித்த அரசாங்கம், இன்று சில நிறுவனங்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்து ஏழை எளிய மக்களின் உரிமைகளைப் பறித்துள்ளது.

எனவே, நாட்டில் அநியாயமாக உயர்த்தப்படும் மின்கட்டணங்களைத் தடுத்து நிறுத்தவும், சூரிய சக்தித் தொழில் துறையினரின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்த அநீதியான சட்டங்களையும் திட்டங்களையும் முறியடிக்கவும் அனைத்து சோலார் மற்றும் மின் நுகர்வோர், சூரிய சக்தி ஆர்வலர்கள் எதிர்வரும் 7ஆம் திகதி கொழும்புக்கு வருகை தந்து இந்தப் போராட்டத்தில் கைகோர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026 இறுதி காலாண்டில் மின் கட்டணத்தில்...

2026-11-11 17:41:14
news-image

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிச்சயம் இரத்துச்...

2026-11-11 22:41:08
news-image

காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் இயற்றப்படுவதை நாம் ஏற்பதில்லை...

2026-11-11 22:31:13
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி...

2026-11-11 17:27:27
news-image

2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அறிமுகமாகும் மெட்ரோ...

2026-11-11 17:23:45
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்க வரவு -...

2026-11-11 18:21:49
news-image

சவூதி நீதிமன்ற வழக்கிலிருந்து அனோஜன் சிவராசா...

2026-11-11 21:12:02
news-image

சஜித் பிரேமதாச விநியோகித்த பேருந்துகளுக்கு முறையாகச்...

2026-11-11 13:22:17
news-image

பொருளாதாரத் தோல்விகளை மூடிமறைக்க எதிர்க்கட்சிகளை முடக்கும்...

2026-11-11 17:51:02
news-image

2027 வரவு செலவுத் திட்டத்தை நலன்புரி...

2026-11-11 20:54:31
news-image

விசுவமடு மகாவித்தியால மைதானத்திற்கான சுற்றுவேலியை அமைத்துக்கொடுத்த...

2026-11-11 20:50:59
news-image

மலையக மக்களின் காணி, வீடமைப்பு உரிமைகளுக்காக ...

2026-11-11 18:22:24