நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த வீதி விபத்துக்கள் வத்தேகம, குருநாகல், அத்துருகிரிய மற்றும் பேலியகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று புதன்கிழமை (4) பதிவாகியுள்ளன.
பன்வில - வத்தேகம வீதி
வத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்வில - வத்தேகம வீதியின் வத்தேகம வலயக் கல்வி திணைக்களத்திற்கு அருகில், கெப் வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த வத்தேகம பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் கெப் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் - குருநாகல் வீதி
குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தளம் - குருநாகல் வீதியில் சாரகம குளத்திற்கு அருகில் கார் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 40 முதல் 50 வயது மதிக்கத்தக்க ஆண் எனவும், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துருகிரிய - கொடகம வீதி
அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்துருகிரிய - கொடகம வீதியில், அத்துருகிரிய திசையில் பயணித்த தனியார் பேருந்து ஒன்று நிறுத்தப்படுவதற்காக வேகத்தைக் குறைத்தபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் பேருந்தின் பின்பகுதியில் மோதி வீதியில் கவிழ்ந்துள்ளது.
அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அதன் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பாதுக்கை, படவல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஆவார்.
விபத்துடன் தொடர்புடைய மற்றைய மோட்டார் சைக்கிளின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு – கண்டி பிரதான வீதி
பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பந்தோலன சந்திக்கு அருகில் கொழும்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, அதே திசையில் பயணித்த பிரைம் மூவர் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது அதனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ராஜகிரிய, மொரகஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய நபராவார்.
விபத்து தொடர்பில் பிரைம் மூவர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்பந்தப்பட்ட வத்தேகம, குருநாகல், அத்துருகிரிய மற்றும் பேலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM