மீகஹதென்ன பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் புறப்பட்டுச் சென்ற பின்னர் காணாமல்போயுள்ள 43 வயதுடைய நபர் ஒருவரைக் கண்டறிவதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்படி, காணாமல்போனவர் மீகஹதென்ன, புவகஹஹேன பகுதியைச் சேர்ந்த விக்ரமநாயக்க கருணாரத்னகே தர்ஷன திவங்க ஆவார்.
காணாமல்போன நபரின் தந்தையினால் மீகஹதென்ன பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நபர் கடந்த ஏப்ரல் மாதம் மணம்பிட்டிய மற்றும் வெலிகந்த பகுதிகளுக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும், அதன் பின்னர் அவர் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல்போனவரின் தோற்ற விபரங்கள்:
உயரம்: சுமார் 5 அடி 4 அங்குலம்
நிறம்: கருமை
உடலமைப்பு: மெலிந்த தோற்றம் மற்றும் குட்டையான தலைமுடி
குறித்த நபரின் இருப்பிடம் குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், உடனடியாகப் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:
பொறுப்பதிகாரி, மீகஹதென்ன பொலிஸ் நிலையம்: 071-8591706
மீகஹதென்ன பொலிஸ் நிலையம்: 034-2284022
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மீகஹதென்ன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM