முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து காணாமல்போன மீனவர்கள் தொடர்பான தற்போதைய நிலைமை அறிக்கை

05 Nov, 2026 | 02:46 PM
image

முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை பிரதேசத்திலிருந்து கடலுக்குச் சென்று காணாமல்போன 3 மீனவர்கள் தொடர்பாகக் கிடைத்துள்ள தற்போதைய தகவல்களின் அடிப்படையில், குறித்த மீனவர்கள் கடல் நீரோட்டம் மற்றும் பலத்த காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு ஆழ்கடல் பகுதிக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீன்பிடிப் படகுகளுடன் இணைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அந்தத் தகவலின் அடிப்படையில், குறித்த 3 மீனவர்களில் ஒருவர்  மீன்பிடிப் படகில் இருப்பதாகவும், ஏனைய இருவரும் மற்றைய மீன்பிடிப் படகுகளில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இத்தகவல்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் பல நாட்கள் கடலில் தங்கியிருந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின்னரே, கரை திரும்புவதால், குறித்த படகுகள் கரையை வந்தடைந்த பின்னரே மீனவர்களின் இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு நிலைமையை உறுதிப்படுத்த முடியும்.

மேலதிக தகவல்களை பெற்றுக்கொண்டு இத்தகவல்களை உறுதிப்படுத்தும் நோக்கில், முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் மாவட்ட செயலகம் ஆகியன இலங்கை கடற்படையினருக்கு இவ்விடயம் தொடர்பாக அறிவித்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து மேலதிக நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026 இறுதி காலாண்டில் மின் கட்டணத்தில்...

2026-11-11 17:41:14
news-image

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிச்சயம் இரத்துச்...

2026-11-11 22:41:08
news-image

காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் இயற்றப்படுவதை நாம் ஏற்பதில்லை...

2026-11-11 22:31:13
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி...

2026-11-11 17:27:27
news-image

2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அறிமுகமாகும் மெட்ரோ...

2026-11-11 17:23:45
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்க வரவு -...

2026-11-11 18:21:49
news-image

சவூதி நீதிமன்ற வழக்கிலிருந்து அனோஜன் சிவராசா...

2026-11-11 21:12:02
news-image

சஜித் பிரேமதாச விநியோகித்த பேருந்துகளுக்கு முறையாகச்...

2026-11-11 13:22:17
news-image

பொருளாதாரத் தோல்விகளை மூடிமறைக்க எதிர்க்கட்சிகளை முடக்கும்...

2026-11-11 17:51:02
news-image

2027 வரவு செலவுத் திட்டத்தை நலன்புரி...

2026-11-11 20:54:31
news-image

விசுவமடு மகாவித்தியால மைதானத்திற்கான சுற்றுவேலியை அமைத்துக்கொடுத்த...

2026-11-11 20:50:59
news-image

மலையக மக்களின் காணி, வீடமைப்பு உரிமைகளுக்காக ...

2026-11-11 18:22:24