SAFF சம்பியன் பட்டத்துக்கு 23 ஆண்டுகளாக காத்திருக்கும் பங்களாதேஷ் இன்று இரவு பூட்டானை சந்திக்கிறது

Published By: Digital Desk 2

05 Nov, 2026 | 02:41 PM
image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷின் டாக்கா தேசிய விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (5) இரவு வரவேற்பு நாடான பங்களாதேஷுக்கும் பூட்டானுக்கும் இடையிலான பி குழு போட்டி நடைபெறவுள்ளது.

தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன் பட்டத்துக்கு 23 வருடங்களாக காத்திருக்கும் வரவேற்பு நாடான பங்களாதேஷ், சொந்த நாட்டில் போட்டி நடைபெறுவதால் அதனை அனுகூலமாக்கிக் கொண்டு பூட்டானுக்கு எதிராக தனது வெற்றிக்கணக்கை ஆரம்பிக்க உறுதிபூண்டுள்ளது.

இந்த வருடம் சம்பியன் பட்டத்தை சுவீகரிக்க முடியும் என நம்புவதற்கு எல்லா காரணங்களும் இருப்பதாக பங்களாதேஷின் தலைமைப் பயிற்றுநர் தோமஸ் டூலி தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் போன்று இம்முறை பங்களாதேஷ் அணி அழுத்தங்களை எதிர்கொள்ளவில்லை எனவும் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையுடன் வீரர்கள் இந்த சுற்றுப் போட்டியை எதிர்கொள்வதாகவும் அவர் கூறினார்.

பங்களாதேஷும் பூட்டானும் சர்வதேச மற்றும் சிநேகபூர்வ சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் 17 தடவைகள் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன.

பங்களாதேஷ் 13 வெற்றிகளை ஈட்டியுள்ளதுடன் இரண்டில் மாத்திரமே பூட்டான் வெற்றிபெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் வெற்றி - தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

இந்த பெறுபேறுகளின் அடிப்படையில் பங்களாதேஷ் வெற்றி பெறுவதற்கு அனுகூலமான அணியாகக் காணப்படுகிறது.

இந்தப் போட்டியில் பூட்டான் அசாத்திய திறமையை வெளிப்படுத்தினாலன்றி பங்களாதேஷை வெற்றிகொள்வது இலகுவான காரியமல்ல.

தெற்காசிய கால்பந்தாட்டத்தில் பங்களாதேஷ் கடைசியாக 2003ஆம் ஆண்டு தனது சொந்த மண்ணில் சம்பியனாகி இருந்தது. அதன் பின்னர் 2009இலும் 2018இலும் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பை பங்களாதேஷ் நடத்திய போதிலும் அந்த இரண்டு அத்தியாயங்களிலும் பங்களாதேஷின் பெறுபேறுகள் திருப்திகரமாக அமையவில்லை.

ஆனால், இந்த வருடம் பங்களாதேஷ் கடைசிவரை போராடும் என நம்பப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கான...

2026-11-10 00:21:02
news-image

'இறுதிப் போட்டியில் பங்களாதேஷும் இந்தியாவும் விளையாடட்டும்'...

2026-11-10 00:18:22
news-image

கொமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப் 2026

2026-11-09 19:17:14
news-image

சாவ் சம்பின்ஷிப்பில் பூட்டானுக்கு எதிரான போட்டியில்...

2026-11-08 22:18:41
news-image

19இன் கீழ் ஆடவர் ஆசிய கிண்ண...

2026-11-06 20:56:55
news-image

குறைந்த எண்ணிக்கைகளைக் கொண்ட 3 நாள்...

2026-11-06 19:27:40
news-image

இளையோர் ஒலிம்பிக் ஆண்களுக்கான 200 மீற்றர்...

2026-11-06 18:12:26
news-image

இந்தியா – இலங்கை ஒருநாள் கிரிக்கெட்...

2026-11-06 09:30:30
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-11-06 03:58:54
news-image

SAFF சம்பியன்ஷிப் 2026: பூட்டானுடனான பரபரப்பான...

2026-11-06 03:56:15
news-image

17 இன் கீழ் ஆசிய கிண்ண...

2026-11-06 03:53:01
news-image

ஐந்து கோல்கள் அடிக்கப்பட்ட பரபரப்பான ஆட்டத்தில்...

2026-11-06 11:11:23