வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், 12 திறந்த பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுத் தலைமறைவாகியிருந்த 40 வயதுடைய பெண் ஒருவர் ராகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்படி, கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் ராகம பொலிஸாரால் புதன்கிழமை (4) இரவு ஜின்கெந்த பகுதியில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின்போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக வாக்குறுதி அளித்துப் பலரிடமிருந்து பெருந்தொகை பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஆஜராகாமல் தொடர்ச்சியாகத் தலைமறைவாகி வந்தமையினால், இவருக்கு எதிராக வெலிசர நீதவான் நீதிமன்றத்தால் 12 பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தமை பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று வியாழக்கிழமை (5) வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ராகம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM