சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் தரம் பதினொன்றில் கல்வி கற்கும் மாணவிகள் தனது உயிர்த் தோழியின் காதலனை வீடு தேடிச் சென்று மிரட்டிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மகளிர் பாடசாலையில் தரம் பதினொன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் ஆண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மணவர் ஒருவரை காதலித்துள்ளார்.
குறித்த இரு மாணவர்களதும் காதல் தொடர்பில் கடந்த ஒரு மாதமாக விரிசல் ஏற்படவே மாணவன் மாணவியுடன் பேசுவதை நிறுத்தியுள்ளான்.
காதலன் தன்னோடு பேசாத காரணத்தால் மனமுடைந்த காதலி பல நாட்களாக பாடசாலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
தனது உயிர்த் தோழி பாடசாலைக்கு வராமைக்கான காரணம் அறிந்த ஏனைய நான்கு தோழிகளும் தங்களது உயிர்த் தோழியின் காதலனது வீட்டை தேடி பிடித்து சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
தங்களது தோழி மிகவும் மனமுடைந்து வருத்தத்தில் இருப்பதாகவும் மீண்டும் அவளுடனான காதல் தொடர்பை ஆரம்பிக்குமாறும் அவ்வாறு அவளுடன் செய்யாவிடின் அடியாட்களை கூட்டி வந்து குறித்த காதலனை கொலை செய்து விடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளனர்.
கொலை மிரட்டல் தொடர்பாக குறித்த காதலன் கேகாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த விடயத்தோடு தொடர்பு பட்ட காதலி உட்பட ஐந்து மாணவிகளையும் காதலனையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து அறிவுரைகள் கூறி சமாதானப்படுத்தி வழக்குப் பதிவுகள் எதுவும் செய்யாது அனுப்பி வைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM