திஸ்ஸமஹாராம பகுதிக்கு அருகில் உள்ள பாபவ உத்தகந்தர வனப் பகுதியில் உயிருள்ள அரிய வகை வனவிலங்குகள் மற்றும் விலங்குகளின் பாகங்களைச் சட்டவிரோதமாகச் சேகரித்து வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஜெர்மன் சுற்றுலாப்பயணிகள் இருவரும், அவர்களுக்கு உதவிய உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுச்சூழலில் உள்ள ஊர்வன மற்றும் பூச்சிகளைப் பிடித்துச் சேகரிப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், 2ஆம் திகதி வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் இரவில் சுற்றுலாப்பயணிகளைப் போல மாறுவேடமிட்டுச் சோதனைகளை முன்னெடுத்தனர்.
சோதனையின்போது அடையாளம் காணப்பட்ட ஜெர்மன் நாட்டவர்கள் இருவர் மற்றும் உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி தங்கியிருந்த யால நம்பா முகாமின் அறைகளை அதிகாரிகள் பரிசோதித்தனர். ஆரம்பத்தில் அங்கு சட்டவிரோத பொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.
இருப்பினும், உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி வேறொரு அறையைத் தனது அறை எனக் கூறி அதிகாரிகளைத் திசைதிருப்ப முயன்றதால் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், அவரது உண்மையான அறை தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இச்சோதனையின்போது மலைப்பாம்புகள், ஊர்வன, விசேட வகை அந்துப்பூச்சிகள் மற்றும் தும்பிகள், முள்ளம்பன்றியின் முட்கள், மான்களின் எலும்புகள், கால்நடைகளின் பற்கள் மற்றும் மயில் இறகுகள் உள்ளிட்ட பெருமளவிலான உயிருள்ள விலங்கு மாதிரிகள் மற்றும் பாகங்கள் கைப்பற்றப்பட்டன.
அத்துடன் பாம்புகள் உள்ளிட்ட விலங்குகளைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், மாதிரிப் பொருட்களைப் பாதுகாத்துப் பேணுவதற்கான கொள்கலன்கள் மற்றும் பல்வேறு இரசாயனப் பொருட்கள் அடங்கிய போத்தல்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபர்கள் மூவரும் 3ஆம் திகதி திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
மீட்கப்பட்ட உயிருள்ள விலங்குகளை தெஹிவளை உயிரியல் பூங்காவில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கு விசாரணையை 6ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
இலங்கையின் உயிரியல் மற்றும் மரபியல் வளங்களைக் கொள்ளையிடும் நோக்கில் இதற்கு முன்னரும் வெளிநாட்டவர்கள் இதுபோன்று சட்டவிரோதமாக வனவிலங்கு மாதிரிகளைச் சேகரித்து கைதாகியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
உடவளவை தேசிய பூங்காவின் பனஹடுவ வனஜீவராசிகள் வரம்பு அலுவலக உத்தியோகத்தர்களால் இந்த விசேட மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM