(நெவில் அன்தனி)
பங்களாதேஷின் டாக்காவில் இன்று (05) வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள 15ஆவது தெற்காசிய காலபந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் தொடக்க போட்டியில் பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.
இப்போட்டி டாக்கா தேசிய விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
நடப்பு சம்பியனான இந்தியா தனது இரண்டாம் நிலை அணியையே இந்த வருடம் களம் இறக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சிரேஷ்ட கால்பந்தாட்ட அணியினர் நியூஸிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ளதாலும் இண்டியன் சுப்பர் லீக்கில் விளையாடும் சிரேஷ்ட வீரர்களுக்கு விடுகை கொடுக்க சில கழகங்கள் மறுப்பதாலும் இந்தியாவின் 23 வயதுக்குட்பட்ட அணியே தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப்பில் விளையாடவுள்ளது.
ஆரம்பப் போட்டியை முன்னிட்டு இந்திய குழாத்தில் 18 வீரர்களே இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இரண்டாம் கட்டம் மற்றும் இறுதிச் சுற்றின்போது இந்திய அணியில் பிரதான வீரர்கள் முழுமையாக இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இக் குழுவில் இடம்பெறும் பாகிஸ்தானையும் மாலைதீவுகளையும் குறைத்து மதிப்பிடவேண்டாம் என தனது வீரர்களுக்கு இந்திய அணி பயிற்றுநர் நௌஷாத் மூசா அறிவுரை வழங்கியுள்ளார்.
பீபா தரவரிசையில் இந்தியா 138ஆவது இடத்திலும் மாலைதீவுகள் 173ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 197ஆவது இடத்திலும் இருக்கின்றன.

மாலைதீவுகளில் கடந்த மூன்று வருடங்களாக முதல் நிலை போட்டிகள் நடத்தப்படாததால் அதன் முன்னேற்றத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், கால்பந்தாட்டத்தில் எதனையும் உறுதியாகக் கூறமுடியாது. ஏனென்றால் கால்பந்தாட்ட தரவரிசையில் பின்னிலையில் உள்ள அணிகள் தலைகீழ் முடிவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் மிக்கவை.
இந் நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள போட்டி கடைசிவரை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பாரக்கப்படுகிறது.
இப் போட்டியில் பி குழுவில் பங்களாதேஷ், பூட்டான், இலங்கை ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM