முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா புதிய அரசியல் கட்சியொன்றை இன்று ஆரம்பித்துள்ளார்.

கடந்த காலங்களில், ஊடகம் மற்றும் ஏனைய சில துறையினருடன் முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டவர் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.

நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து சில நாட்களாக மௌனம் காத்து வந்த அவர், தற்போது புதிய கட்சியொன்றின் மூலம் மீளியங்க முடிவுசெய்துள்ளார்.

தமது கட்சிக்கு ‘தேசிய ஜனதா பக்சய’ எனப் பெயரிட்டுள்ள அவர், நாரஹேன்பிட்டியில் உள்ள தமது இல்லத்தில் வைத்து இந்தக் கட்சியை ஆரம்பித்துள்ளார்.