10,000 சிறுவர்கள் மாயம் : பாலியல் தொழிலாளிகளாகவும் அடிமைகளாகவும் விற்கப்பட்டிருக்கலாம் என அச்சம்

Published By: Robert

01 Feb, 2016 | 03:11 PM
image

Europol has found evidence of a "criminal infrastructure" established since mid-2014 which exploits refugees [Darrin Zammit/Reuters]

ஐரோப்பாவுக்கு சட்டவிரோமாக வந்த அகதிச் சிறுவர்களில் குறைந்தது 10,000 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களில் பலர் கடத்தப்பட்டு பாலியல் தொழிலாளிகளாகவும் மற்றும் அடிமைகளாகவும் விற்கப்பட்டிருக்கலாம் என நம்புவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட அமுலாக்க முகவர் நிலையமான யூரோபோல் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவுக்கு பாதுகாப்பற்ற பயணத்தை மேற்கொண்டு வரும் அகதிச் சிறுவர்களை குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள் இலக்கு வைத்து கடத்திச் சென்று சுய ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தி வருவதாக அந்த நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் மட்டும் சுமார் 26,000 சிறுவர்கள் ஐரோப்பாவுக்கு சட்டவிரோத பயணத்தை மேற்கொள்ளும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருந்தனர்.

அவர்களில் குறைந்தது 10,000 அகதிச் சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் யூரோபோவின் தலைமை அதிகாரியான பிரெயின் டொனால்ட் தெரிவிக்கையில், “அந்த 10,000 சிறுவர்களுக்கும் என்ன நடந்தது என்பது எமக்குத் தெரியாது. அவர்கள் யாருடன் இருக்கிறார்கள் என்பதோ அல்லது அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதோ எமக்குத் தெரியாது. ஆனால் பாலியல் தொழில் மற்றும் ஆட்கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள் அந்தச் சிறுவர்களை இலக்கு வைத்திருப்பதற்கான சான்றுகள் உள்ளன. 

மேலும், காணாமல் போன அனைத்து சிறுவர்களுமே குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களிடம் சிக்கியுள்ளனர் என நாம் கருதவில்லை" என்று கூறினார்.

ஜேர்மனி, சுவீடன் ஆகிய நாடுகளை மட்டும் சுமார் 90,000 சிறுவர்கள் வயது வந்தவர்களின் உதவியில்லாமல் வந்தடைந்துள்ளதாகவும் முழு ஐரோப்பாவையும் வந்தடைந்துள்ள குடியேற்றவாசிகளில் மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிகமானோர் சிறுவர்கள் எனவும் ஐக்கிய நாடுகள் சிறுவர்கள் நிதியம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47