(நமது நிருபர்)
நாடு முழுவதும் உள்ள 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 170,950 விவசாயிகளுக்கு மாதாந்தம் 415 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான ஓய்வூதியக் கொடுப்பனவுகளை 3,975 தபால் நிலையங்கள் ஊடாக வழங்குவதற்கு விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
தேங்கிக் கிடந்த விண்ணப்பங்களுக்கு உடனடித் தீர்வு புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் பிறப்பிக்கப்பட்ட பணிப்புரைகளுக்கு அமைய, 2024ஆம் ஆண்டுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டு நீண்டகாலமாக தேங்கிக் கிடந்த விவசாயிகளின் ஓய்வூதிய விண்ணப்பங்கள் அனைத்தும் தற்போது பரிசீலிக்கப்பட்டு தீர்க்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
மேலும், எவ்வித குறைபாடுகளுமின்றி முழுமையாக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மாத காலத்துக்குள் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
25 சதவீதத்துக்கும் மேல் பங்களித்தவர்களுக்கான விசேட சலுகை தமது மாதாந்த தவணைக் கட்டணங்களை கிரமமாகச் செலுத்தத் தவறியபோதிலும், தேவையான மொத்தப் பங்களிப்பில் 25 சதவீதத்திற்கும் அதிகமான தொகையைச் செலுத்தியுள்ள பங்களிப்பாளர்களின் கொடுப்பனவுகளை மீளாய்வு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்களின் தகுதியான பங்களிப்புத் தொகையைக் கணக்கிட்டுத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, முன்னர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, 2014ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னர் 60 வயதை எட்டிய விவசாயிகளுக்கான நிலுவை ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை அரசாங்கத்தினால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
திறைசேரியினால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி ஏற்பாடுகளுக்கு அமைய இந்நிலுவைக் கொடுப்பனவுகள் உரிய முறையில் தீர்த்து வைக்கப்படும் என்றும் விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM