ஹைபொரஸ்ட் மெரிகோல்ட் பகுதியில் புதையல் தோண்டிய 5 சந்தேக நபர்கள் கைது!

05 Nov, 2026 | 12:55 PM
image

ஹைபொரஸ்ட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெரிகோல்ட் பகுதியில் காணியொன்றில் புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் சட்டவிரோதமான முறையில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹைபொரஸ்ட் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவிற்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, காணியொன்றில் புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் சட்டவிரோதமான முறையில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சந்தேக நபர்கள், அகழ்வாராய்ச்சி உபகரணங்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கந்தப்பளை, தொடமுன்ன மற்றும் பலங்கொடை பகுதிகளைச் சேர்ந்த 27, 35, 44 மற்றும் 52 ஆகிய வயதுடையவர்கள் ஆவர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஹைபொரஸ்ட் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026 இறுதி காலாண்டில் மின் கட்டணத்தில்...

2026-11-11 17:41:14
news-image

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிச்சயம் இரத்துச்...

2026-11-11 22:41:08
news-image

காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் இயற்றப்படுவதை நாம் ஏற்பதில்லை...

2026-11-11 22:31:13
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி...

2026-11-11 17:27:27
news-image

2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அறிமுகமாகும் மெட்ரோ...

2026-11-11 17:23:45
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்க வரவு -...

2026-11-11 18:21:49
news-image

சவூதி நீதிமன்ற வழக்கிலிருந்து அனோஜன் சிவராசா...

2026-11-11 21:12:02
news-image

சஜித் பிரேமதாச விநியோகித்த பேருந்துகளுக்கு முறையாகச்...

2026-11-11 13:22:17
news-image

பொருளாதாரத் தோல்விகளை மூடிமறைக்க எதிர்க்கட்சிகளை முடக்கும்...

2026-11-11 17:51:02
news-image

2027 வரவு செலவுத் திட்டத்தை நலன்புரி...

2026-11-11 20:54:31
news-image

விசுவமடு மகாவித்தியால மைதானத்திற்கான சுற்றுவேலியை அமைத்துக்கொடுத்த...

2026-11-11 20:50:59
news-image

மலையக மக்களின் காணி, வீடமைப்பு உரிமைகளுக்காக ...

2026-11-11 18:22:24