ஐக்கிய நாடுகள் பிரகடனம் டிசம்பர் 2015இல், ஐ.நா. பொதுச்சபையானது இன்று நவம்பர் 5ஆம் திகதியை உலக சுனாமி விழிப்புணர்வு நாளாக அறிவித்தது. இயற்கை பேரிடர்களில் பெற்ற அனுபவத்தால் ஜப்பான் இதற்கான முன்முயற்சியை எடுத்தது. ஐ.நா. பேரழிவு அபாயக் குறைப்பு அமைப்பு (UNDRR) இந்நாளை ஒருங்கிணைத்துள்ளது.
"சுனாமியை எதிர்கொள்ள தயாராக இருங்கள் மற்றும் நெகிழ்ச்சித்தன்மை உங்களிடமிருந்தே தொடங்குகிறது" எனும் கருப்பொருளின் கீழ், தனிநபர் மற்றும் சமூக தயார்நிலையின் முக்கியத்துவத்தை இந்நாள் வலியுறுத்துகிறது.
ஜப்பானில் 1854ஆம் ஆண்டு ஏற்பட்ட 'நங்காய்' (Nankai) நிலநடுக்கத்தின்போது, கிராமத் தலைவர் அமாகுச்சி கோரியே (Goryo Hamaguchi) கடல் பின்வாங்குவதை உணர்ந்து, ஆபத்தை எச்சரிக்கத் தனது நெற்களஞ்சியத்துக்கு தீ வைத்து மக்களை உயரமான பகுதிக்கு வழிநடத்தி உயிர்களைக் காப்பாற்றிய நிகழ்வை நினைவுகூரும் வகையில் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உலக சுனாமி விழிப்புணர்வு நாளின் இந்த ஆண்டின் கருப்பொருளாக (2026) “Be Tsunami Ready: Resilience Starts With You” , "சுனாமிக்கு தயாராவோம், மீட்சி உங்களிடமிருந்து தொடங்குகிறது" என்பதாகும்.
சுனாமி கடந்த 100 ஆண்டுகளில் 58 சுனாமிகள் 2,60,000க்கும் அதிகமான உயிர்களைப் பறித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் 2004 இந்தியப் பெருங்கடல் சுனாமியே மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேசமானது 2004 சுனாமிக்குப் பிறகு, ஜப்பானின் கோபே நகரில் கூடி ”ஹியோகோ செயற்பாட்டுத் திட்டம்” மற்றும் ”இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பு” உருவாக்கின.
செண்டாய் கட்டமைப்பு (Sendai Framework for Disaster Risk Reduction 2015-2030) என்பது பேரிடர் அபாயங்களைக் குறைப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் (UN) ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய உலகளாவிய ஒப்பந்தமாகும்.
2015 மார்ச் மாதம் ஜப்பானின் செண்டாய் நகரில் நடைபெற்ற 3வது ஐ.நா உலக மாநாட்டில் இக்கட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது இதற்கு முந்தைய 'ஹியோகோ கட்டமைப்புக்கு' (Hyogo Framework) மாற்றாகக் கொண்டுவரப்பட்டது.
செண்டாய் கட்டமைப்பு 2030ஆம் ஆண்டிற்குள் உலகளவில் பேரிடர் அபாயங்கள், உயிரிழப்புகள், வாழ்வாதாரப் பாதிப்புகள் மற்றும் பொருளாதார சேதங்களை கணிசமாகக் குறைப்பதே இதன் முதன்மைக் குறிக்கோளாகும்.
இலங்கையில் 2004 டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலையால் (சுனாமி) 35,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் வட - கிழக்குத் தமிழ் பகுதிகளில் மட்டும் மூன்றில் இரண்டு பங்கு பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM