2026இன் முதல் 6 மாதங்களில் இலங்கையிலிருந்து 8.7 இலட்சத்துக்கும் அதிகமான டிக்டாக் காணொளிகள் நீக்கம்!

05 Nov, 2026 | 11:21 AM
image

பிரபல குறுநொடி காணொளித் தளமான 'டிக்டாக்'  நிறுவனம் வெளியிட்டுள்ள தனது அண்மைக்கால வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தமது சமூக வழிகாட்டுதல்களை மீறியமைக்காக இலங்கையிலிருந்து பதிவேற்றப்பட்ட 870,000க்கும் அதிகமான காணொளிகள் நீக்கப்பட்டுள்ளன.

வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 871,446 காணொளிகள் அகற்றப்பட்டுள்ளன. 

இதில் முதல் காலாண்டில்  441,089 காணொளிகளும், இரண்டாம் காலாண்டில் (Q2) 430,357 காணொளிகளும் அடங்கும். இதற்கமைய, முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் காலாண்டில் நீக்கப்பட்ட காணொளிகளின் எண்ணிக்கையில் 10,732 (சுமார் 2.4%) வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இலங்கையிலிருந்து நீக்கப்பட்ட காணொளிகள் குறித்த தனித்துவமான வகைப்பாட்டை டிக்டாக் நிறுவனம் வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், உலகளாவிய ரீதியில் நீக்கப்பட்ட காணொளிகளின் வகைப்பாடு பின்வருமாறு அமைந்திருந்தது:

19.5% – உணர்வுபூர்வமான அல்லது முதிர்ந்தோர் சார்ந்த உள்ளடக்கங்கள் 

16.1% – மன மற்றும் நடத்தை சுகாதாரம் தொடர்பான உள்ளடக்கங்கள்.

13.8% – உடல் வெளிப்பாடு மற்றும் பாலின நடத்தைகள்.

13.7% – பாதுகாப்பு மற்றும் நாகரிக தரநிலைகளை மீறுதல்.

13.5% – அபாயகரமான செயற்பாடுகள் மற்றும் சவால்கள்.

1.8% – தள விவாதங்களை மீறி திருத்தப்பட்ட ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள்.

நீக்கப்பட்ட காணொளிகளில் முதல் காலாண்டில் 20,051 காணொளிகளும், இரண்டாம் காலாண்டில் 12,960 காணொளிகளும் மேன்முறையீடுகளுக்குப் பின்னர் மீண்டும் தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி ஆறு மாதகாலத்தில் மொத்தம் 33,011 காணொளிகள் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் இரண்டாம் காலாண்டில் நீக்கப்பட்ட காணொளிகளில் 99.4% காணொளிகள் பயனர்கள் புகார் அளிப்பதற்கு முன்னரே கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. (முதல் காலாண்டில் இது 99.1%ஆக இருந்தது)

இருப்பினும், கண்டறியப்பட்ட 24 மணிநேரத்துக்குள் நீக்கப்பட்ட காணொளிகளின் வீதம் 95%இல் இருந்து 93.9%ஆகச் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இரு காலாண்டுகளிலும் இலங்கையில் வெளியிடப்பட்ட காணொளிகளில் நீக்கல் வீதம் 0.5%ஆக நிலவியுள்ளது.

உலகளாவிய ரீதியில் இரண்டாம் காலாண்டில் மட்டும் சுமார் 188.3 மில்லியன் காணொளிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இதில் செயற்கை நுண்ணறிவு பகுப்பாய்வு உட்பட தானியங்கி தொழில்நுட்பங்கள் மூலம் 97.4% நீக்கல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் டிக்டாக் தெரிவித்துள்ளது.

மேலும், அதே காலப்பகுதியில் உலகளவில் 278.4 மில்லியன் கருத்துக்கள், 146.8 மில்லியன் போலிக் கணக்குகள் மற்றும் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் கணக்குகள் என சந்தேகிக்கப்படும் 26.8 மில்லியன் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026 இறுதி காலாண்டில் மின் கட்டணத்தில்...

2026-11-11 17:41:14
news-image

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிச்சயம் இரத்துச்...

2026-11-11 22:41:08
news-image

காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் இயற்றப்படுவதை நாம் ஏற்பதில்லை...

2026-11-11 22:31:13
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி...

2026-11-11 17:27:27
news-image

2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அறிமுகமாகும் மெட்ரோ...

2026-11-11 17:23:45
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்க வரவு -...

2026-11-11 18:21:49
news-image

சவூதி நீதிமன்ற வழக்கிலிருந்து அனோஜன் சிவராசா...

2026-11-11 21:12:02
news-image

சஜித் பிரேமதாச விநியோகித்த பேருந்துகளுக்கு முறையாகச்...

2026-11-11 13:22:17
news-image

பொருளாதாரத் தோல்விகளை மூடிமறைக்க எதிர்க்கட்சிகளை முடக்கும்...

2026-11-11 17:51:02
news-image

2027 வரவு செலவுத் திட்டத்தை நலன்புரி...

2026-11-11 20:54:31
news-image

விசுவமடு மகாவித்தியால மைதானத்திற்கான சுற்றுவேலியை அமைத்துக்கொடுத்த...

2026-11-11 20:50:59
news-image

மலையக மக்களின் காணி, வீடமைப்பு உரிமைகளுக்காக ...

2026-11-11 18:22:24