(க.சிவலிங்கமூர்த்தி)
தென்கொரியாவின் ஷங்ஷின் பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையின் ஊடாக இலங்கை இளைஞர்களுக்கு உயர்கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படவுள்ளதாகத் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
தென்கொரிய விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று வியாழக்கிழமை (05) இலங்கை திரும்பிய அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம், 2023ஆம் ஆண்டு முதல் தென்கொரியாவின் ஷங்ஷின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இலங்கை இளைஞர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
இதனை மேலும் முறைப்படுத்தி எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தும் நோக்கில் கடந்த 2ஆம் திகதி உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது.
இதில் தென்கொரியாவின் கல்வி மற்றும் இளைஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதிநிதிகள், வர்த்தக சம்மேளனத்தின் தலைவர், ஷங்ஷின் பல்கலைக்கழகப் பிரதிநிதிகள், இலங்கை தொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் பங்கேற்றனர்.
இதன் ஊடாக தொழிற்சாலைகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான பாடநெறிகளைப் பயின்று, அதன் பின்னர் தென்கொரியாவில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதற்காக முதற்கட்டமாக தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் பாடநெறிகளுக்கு இளைஞர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டு பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்படுவர்.
2023ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 50 இலங்கை மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்றுள்ளனர். எதிர்காலத்தில் அதிகளவான இளைஞர்களை இவ்வாய்ப்புகளுக்கு அனுப்புவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
மேலும், தென்கொரியாவின் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனமொன்றையும் பார்வையிட்டோம். நவீன இயந்திரங்கள் மூலம் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் நடைமுறைகள் தொடர்பில் அனுபவங்களைப் பெற்றுக்கொண்டோம்.
இலங்கையில் இடம்பெறும் தொழிற்சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் கருத்திற்கொண்டு, இத்துறையில் தென்கொரியாவின் தொழில்நுட்ப உதவிகளையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றோம்.
காற்றாலைச் சுழலி இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமொன்றையும் பார்வையிட்டோம். இலங்கையின் வலுசக்தித் துறையில் தென்கொரிய முதலீடுகளையும் தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வது தொடர்பில் வலுசக்தி அமைச்சுடன் கலந்துரையாடவுள்ளோம்.
ஏனைய பல்கலைக்கழகங்களிடமிருந்தும் அழைப்புகள் கிடைத்துள்ளன. அவற்றின் வாய்ப்புகளை கல்வி அமைச்சுடன் இணைந்து ஆராய்ந்து, இலங்கை இளைஞர்களுக்கான உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM