ஹோர்மூஸ் நீரிணை வழியாக எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி செல்ல இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு ஈரான் அனுமதி! பின்னணியில் உள்ள காரணம் என்ன?

Published By: Digital Desk 1

05 Nov, 2026 | 10:44 AM
image

உலகின் மிக முக்கியமான கடல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹோர்மூமுஸ் நீரிணை வழியாக இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகளின் கப்பல்கள் பயணிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளித்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

அதன்படி, இந்தியா, சீனா, ஈராக் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணை வழியாகப் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் அமீர் ஹயாத் மொகாதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஈரானின் ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில் அவர்,

“ஹோர்மூஸ் நீரிணையின் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளிலிருந்து இந்தியா, சீனா, ஈராக் மற்றும் கத்தார் ஆகிய நான்கு நாடுகளுக்கும் தற்போது விலக்கு அளித்துள்ளோம். இந்த நாடுகளின் கப்பல்கள் தடையின்றிப் பயணிக்கின்றன. அமெரிக்கர்களும் அவற்றை இடைமறிப்பதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் தேவைப்படுவதால், இந்தியாவிலிருந்து அவற்றை இறக்குமதி செய்வதற்கு வசதியாக இந்தியக் கப்பல்களின் பயணத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமீர் ஹயாத் மொகாதம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சீனக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கியதன் முக்கிய நோக்கம், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுடனான மோதல் சூழலில் சீனாவின் அரசியல் மற்றும் ராஜதந்திர ஆதரவைப் பெற்றுக்கொள்வதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியா மற்றும் சீனக் கப்பல்களிடம் ஈரான் போக்குவரத்துக் கட்டணம் வசூலிப்பதாகவும், கத்தார் கப்பல்களுக்கு கட்டணமின்றிப் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஈராக் கப்பல்களுக்கான கட்டண நடைமுறை குறித்து அவர் தெளிவுபடுத்தவில்லை.

ஈராக் மற்றும் கத்தார் நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள விலக்குகள் பரஸ்பர நலன்கள் மற்றும் இருதரப்பு உறவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோர்மூஸ் நீரிணை உலகளாவிய மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது. பாரசீக வளைகுடா நாடுகளிலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு எரிசக்தி வளங்களைக் கொண்டு செல்லும் முக்கிய கடல் வழித்தடமாக இது விளங்குகிறது.

இந்தியாவின் எரிசக்தி இறக்குமதியிலும் இந்த நீரிணை முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவின் திரவப் பெற்றோலிய வாயு (LPG) இறக்குமதியில் சுமார் 90 சதவீதம் இந்த வழித்தடத்தின் ஊடாகவே வருகின்றது. அதேபோன்று, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் திரவ இயற்கை எரிவாயுவில் (LNG) 50 சதவீதத்துக்கும் அதிகமானவை ஹார்முஸ் நீரிணை வழியாகவே கொண்டுவரப்படுகின்றன.

எனினும், இந்தியாவின் மசகு எண்ணெய் இறக்குமதியில் தற்போது சுமார் 30 சதவீதமே இந்த நீரிணை வழியாக வருகின்றது. கடந்த காலங்களில் இருந்த சார்பு நிலையைவிட இது குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தியக் கப்பல்களுக்கு ஈரான் வழங்கியுள்ள விலக்கு, அந்நாட்டின் எரிசக்தி விநியோகம் மற்றும் கடல் வணிகப் போக்குவரத்துக்கு ஓரளவு நிவாரணத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மூன்று மாடிக்...

2026-11-12 15:39:52
news-image

தென் கொரியாவில் 32 வாகனங்கள் ஒன்றுடன்...

2026-11-12 11:46:59
news-image

மக்கா பிராந்தியத்தை நோக்கி ஏவப்பட்ட இரு...

2026-11-12 10:08:44
news-image

இந்து மூதாட்டிக்கு இறுதிச் சடங்கு :...

2026-11-11 16:07:22
news-image

இஸ்ரேல் பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கு மதன்...

2026-11-11 11:00:23
news-image

பிரித்தானியாவின் இரண்டாவது இராணுவத்தளத்திலிருந்தும் அமெரிக்க விமானப்படையின்...

2026-11-10 17:44:03
news-image

தென் கொரிய மண்ணில் திருவள்ளுவர் சிலை...

2026-11-10 15:49:51
news-image

துருக்கியில் இரும்பு தொழிற்சாலையில் வெடிப்புச் சம்பவம்:...

2026-11-10 13:20:58
news-image

என்விடியா பிரதம நிறைவேற்று அதிகாரி ஜென்சன்...

2026-11-10 12:21:57
news-image

உக்ரைன் ஜனாதிபதியுடன் மோடி பேச்சு: போருக்கு...

2026-11-10 11:10:51
news-image

பாகிஸ்தான் தொலைக்காட்சி தொகுப்பாளர் ராபியா அசன்...

2026-11-10 11:04:16
news-image

செனகல் கடற்பகுதியில் படகு விபத்து: உயிரிழப்பு...

2026-11-09 12:41:18