வெலிமடையில் 850 மில்லியன் ரூபாய் செலவில் மாதிரி கிராமம் - 170 தோட்டக் குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

Published By: Digital Desk 2

05 Nov, 2026 | 11:00 AM
image

(எம்.மனோசித்ரா)

இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில், உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய மாதிரி கிராமம் ஒன்றை அமைப்பதற்கான விசேட திட்டமொன்று வெலிமடை பிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட தித்வா புயல் காரணமாக வீடுகளை இழந்த மற்றும் மண்சரிவு அபாயம் நிறைந்த பகுதிகளில் வாழும் தோட்டத்துறையைச் சேர்ந்த 170 குடும்பங்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. இதற்காக அரசாங்கம் 850 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.

இத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வும் அடிக்கல் நாட்டு விழாவும் வெள்ளிக்கிழமை (6)  வெலிமடை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அபரகல தோட்டத்தில் நடைபெறவுள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயனாளிக் குடும்பம் ஒன்றுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இந்த நிதி மூன்று கட்டங்களாகப் பிரித்து வழங்கப்படும். முதற்கட்டத்தில் 20 இலட்சம் ரூபாவும், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களில் தலா 15 இலட்சம் ரூபாவும் பயனாளிகளுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த 170 வீடுகளும் ஒரே நிலப்பரப்பில் திட்டமிட்ட அடிப்படையில் அமைக்கப்படவுள்ளன. இதற்காக 5 ஹெக்டேயர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 10 பேர்ச் காணி உரிமமும் வழங்கப்படவுள்ளது.

வெறும் வீடுகளை மட்டும் தராமல், மக்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட கிராமமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, புதிய கிராமத்தில் சமூக மண்டபம், விளையாட்டு மைதானம், முறையான வீதி அமைப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு செலவுத் திட்டத்தில் 'வளமான நாடும்...

2026-11-14 16:44:48
news-image

மாகாண அதிகாரங்களைப் பறித்தால் மீண்டும் தமிழீழத்தைக்...

2026-11-14 16:44:15
news-image

கிளிப்பிள்ளை போல ஜனாதிபதி அறிவித்த வரவு...

2026-11-14 16:43:58
news-image

லாப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து...

2026-11-14 16:24:22
news-image

80,000 வேலையில்லாப் பட்டதாரிகளை பயிலுநர்களாக அரச...

2026-11-14 17:58:04
news-image

வலுசக்தித் துறையில் நியாயமான சந்தைப் போட்டி...

2026-11-14 17:27:13
news-image

லாப்ஃப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு விலை அதிகரிப்புக்கு...

2026-11-14 16:29:18
news-image

சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களையும் முழுமையாக மீளப்பெற...

2026-11-14 16:30:34
news-image

அதிபர் சேவையில் காணப்படும் சம்பள முரண்பாடு...

2026-11-14 16:30:03
news-image

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வால்...

2026-11-14 16:21:41
news-image

சட்டவிரோத கடற்றொழில் ஊடாகவே 300 மில்லியன்...

2026-11-14 15:49:51
news-image

மூச்சக்கரவண்டி ஓட்டுநர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாத...

2026-11-14 15:16:51