அமெரிக்காவில் ஹெலிகொப்டர் விபத்து : ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்

Published By: Digital Desk 1

05 Nov, 2026 | 10:39 AM
image

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புளோரிடா மாகாணத்தில் மியாமியில் நேற்று புதன்கிழமை (4) காலை பிஸ்கைன் விரிகுடாவில் வான்வழிப் புகைப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்  இருவர் படுகாயமடைந்ததாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ரொபின்சன் ஆர்44 11' (Robinson R44 II) ரகத்தைச் சேர்ந்த இந்த வணிக ரீதியான ஹெலிகொப்டர், விரிகுடாவில் உள்ள படகுகளை வான்வழியாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்தபோது அந்த ஹெலிகொப்டரில் 3 பேர் இருந்ததாக அமெரிக்க கடலோரப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ஹெலிகொப்டரில் இருந்த 3 பேரில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும், மற்ற இருவரும் உள்ளூர் சிகிச்சை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அமெரிக்க கடலோர காவல்படை உறுதிப்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் ஆகியவை இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளன.

ஹெலிகொப்டரில் பயணம் செய்த 3 பேரின் அடையாளங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடக்கக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செனகல் கடற்பகுதியில் படகு விபத்து: உயிரிழப்பு...

2026-11-09 12:41:18
news-image

எகிப்தில் இரு பயணிகள் ரயில்கள் மோதி...

2026-11-09 12:35:15
news-image

கோல்ஃப் மைதானம் அமைக்க 430 மரங்கள்...

2026-11-09 12:26:53
news-image

ஜப்பானில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி 

2026-11-08 11:51:47
news-image

இஸ்ரேலின் புதிய பிரதமர் யார்? -...

2026-11-08 10:34:39
news-image

இடைத்தேர்தலுக்குப் பின் ஈரான் மீது அமெரிக்கா...

2026-11-07 15:01:16
news-image

மெலனியா ட்ரம்புக்கு உயரிய விருது வழங்கி...

2026-11-07 10:56:17
news-image

2027ஆம் ஆண்டுக்குள் 2 இலட்சம் தற்காலிகக்...

2026-11-07 10:27:51
news-image

குத்துவிளக்கேற்றிய டிரம்ப்! வெள்ளை மாளிகையில் களைகட்டிய...

2026-11-07 10:16:26
news-image

இஸ்ரேலின் புதிய பிரதமர் யார்? ; ...

2026-11-07 10:04:59
news-image

பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றிய...

2026-11-06 17:54:18
news-image

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் –...

2026-11-06 16:05:27