இரட்டைப் பிரஜாவுரிமையை வைத்திருக்கும் கீதா குமாரசிங்க பாராளுமன்ற அங்கத்தவராகப் பதவி வகிக்க முடியாது என மீயுயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று (2) இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
நடிகையும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கீதா குமாரசிங்க, இலங்கை மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளின் குடியுரிமையை வைத்திருப்பதால் அவர் பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்பட முடியாது என வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இதை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இலங்கை அரசியலமைப்பு விதிமுறைகளின் அடிப்படையில் கீதா குமாரசிங்கவை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது.
இதை எதிர்த்து கீதா குமாரசிங்க மீயுயர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். இது குறித்த விசாரணைகள் நேற்று (1) நிறைவுபெற்றன. அதன்படி, அவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
அதில், மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவை உறுதிப்படுத்திய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்க முடியாது எனத் தீர்ப்பளித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM