சவூதி அரேபியாவின் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் அதற்கு எதிரான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கதாகும் - மௌலவி எம்.எஸ். எம் தாஸீம்

Published By: Vishnu

05 Nov, 2026 | 06:43 AM
image

சவூதி அரேபியாவின் புனித தளங்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக ஆமிஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் உதவிப் பொதுச் செயலாளருமாகிய மௌலவி எம்.எஸ். எம் தாஸீம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள கண்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இஸ்லாமிய உலகின் மகுடமாகவும், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல சிறப்பம்சங்களைக் கொண்டதாகவும் திகழும் சவூதி அரேபியா, உலக முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் புண்ணிய பூமியாகும். உலகத்தின் இரு புனிதத் தளங்கள் அமையப் பெற்றதும், அகிலத்துக்கான இறுதி வேதமான அல்குர்ஆன் இறங்கிய பூமியானதும், இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்து, வாழ்ந்து, மறைந்ததும், ஏராளமான நபிமார்களும் ஸஹாபாக்களும் காலடி பதித்த மண்ணுமான இப்புனித பூமியை, சர்வவல்லமையுள்ள அல்லாஹ் அனைத்து வகையிலும் அருள் நிறைந்ததாக ஆக்கியுள்ளான்.

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க புனித பூமி அதன் புனிதத் தளங்களும் பாரிய அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி இருக்கின்ற வேளையில் குறிப்பாக யெமன் நாட்டின் ஹூதி தீவிரவாத கிளர்ச்சியாளர்களால் தொடர்ச்சியாக இலக்கு வைக்கப்படுவதும், தாக்குதல்கள் நடத்த முற்படுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவையாகும். உலக மக்களின் நலன்களில் எப்போதும் கரிசனை கொண்டு, இன, மத பேதங்களுக்கு அப்பால் சர்வதேச மனிதாபிமானப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வரும் சவூதி அரேபியாவின் இறையாண்மை மற்றும் அமைதியின் மீது தொடுக்கப்படும் இத்தகைய அத்துமீறல்களை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். இத்தகைய மானிதாபிமானமற்ற தாக்குதல்கள் உலகின் எப்பாகத்தில் நடந்தாலும் அவை கண்டனத்திற்குரியதாகும். இதனால் உலக பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டு மக்கள் பல துயரங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

மறுபுறம், சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று ரீதியான நட்புறவும் மிகச் சிறந்த இராஜதந்திர உறவும் என்றும் போற்றுதலுக்குரியது. சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நலன்புரித் திட்டங்கள் மற்றும் அனர்த்த கால மனிதாபிமான உதவிகள் என சவூதி அரேபியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் பங்களிப்புகள் அளப்பரியவை. குறிப்பாக, இலங்கையை உலுக்கிய சுனாமிப் பேரிடர் காலத்திலும், உலகையே அச்சுறுத்திய கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்திலும் சவூதி அரேபியா முன்னெடுத்த துரித நிவாரணப் பணிகள், மருத்துவ உபகரண உதவிகள் மற்றும் பொருளாதாரப் பங்களிப்புகள் என்பன இலங்கை மக்களால் என்றும் மறக்க முடியாதவையாகும்.

மேலும், இலங்கையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் அந்நாட்டின் உயர்கல்வி நிலையங்களில் புலமைப்பரிசில்களைப் பெற்று கல்வி கற்று வருவதுடன், பலர் அங்கு கற்றுத் தேர்ந்து எமது நாட்டிலும் உலகின் பல பாகங்களிலும் பல துறைகளில் திறம்பட சேவையாற்றி வருகின்றனர். இலங்கையில் பல பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள், பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் போன்ற பல்வேறு தேசிய உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு சவூதி அரேபியா நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கியுள்ள நிதியுதவிகள் நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்துடன், சவூதி தொண்டு நிறுவனங்கள் இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் ஆற்றிவரும் சமூக-பொருளாதார நற்பணிகள் எம்மால் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரத்தக்கவையாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026 இறுதி காலாண்டில் மின் கட்டணத்தில்...

2026-11-11 17:41:14
news-image

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிச்சயம் இரத்துச்...

2026-11-11 22:41:08
news-image

காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் இயற்றப்படுவதை நாம் ஏற்பதில்லை...

2026-11-11 22:31:13
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி...

2026-11-11 17:27:27
news-image

2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அறிமுகமாகும் மெட்ரோ...

2026-11-11 17:23:45
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்க வரவு -...

2026-11-11 18:21:49
news-image

சவூதி நீதிமன்ற வழக்கிலிருந்து அனோஜன் சிவராசா...

2026-11-11 21:12:02
news-image

சஜித் பிரேமதாச விநியோகித்த பேருந்துகளுக்கு முறையாகச்...

2026-11-11 13:22:17
news-image

பொருளாதாரத் தோல்விகளை மூடிமறைக்க எதிர்க்கட்சிகளை முடக்கும்...

2026-11-11 17:51:02
news-image

2027 வரவு செலவுத் திட்டத்தை நலன்புரி...

2026-11-11 20:54:31
news-image

விசுவமடு மகாவித்தியால மைதானத்திற்கான சுற்றுவேலியை அமைத்துக்கொடுத்த...

2026-11-11 20:50:59
news-image

மலையக மக்களின் காணி, வீடமைப்பு உரிமைகளுக்காக ...

2026-11-11 18:22:24