தாஜுதீன், எக்னலிகொட உள்ளிட்டோர் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் ராஜபக்ஷ குடும்பத்துக்குத் தொடர்பு – சாந்த பத்மகுமார குற்றச்சாட்டு

Published By: Vishnu

05 Nov, 2026 | 06:05 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

வசீம் தாஜுதீன்,பிரகீத் எக்னலிகொட படுகொலை சம்பவங்கள் மற்றும் போத்தல ஜயந்த, கீத்நொயார் மற்றும் உபாலி தென்னக்கோன் ஆகியோர் மீதான கொலை செய்ய முயற்சித்த சம்பவங்களுடன் நாமல் ராஜபக்‌ஷவும், ராஜபக்‌ஷ குடும்பத்தினரும் தொடர்புப்பட்டுள்ளார்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

அரசாங்கம் ஜனநாயகத்துக்கு எதிரான ஒடுக்குமுறையில் ஈடுபட்டு சர்வாதிகாரமாக செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டுகிறார். யார் ஒடுக்குமுறைகளை கொண்டுவந்தது என்று நாங்கள் அவரிடம் கேட்கின்றோம். தற்போது பொலிஸ் இராச்சியம் தொடர்பில் நாமல் குறிப்பிடுகிறார். அப்படியென்றால் தாஜுதினை கொலை செய்தது யார்? அது அம்மாவும், நாமலும் என்று முழு நாட்டுக்கும் தெரியும்.

 அதேபோல் பிரகீத் எக்னலிகொடவை படுகொலை செய்தவர்கள் யார்? நாமலும் அவரின் சித்தப்பாவுமே ஆகும். அதேபோன்று போத்தல ஜயந்த மற்றும் கீத்நொயாரின் கை, கால்களை உடைத்து அவரை கொல்ல முயற்சித்தது யார்? நாமலும் சித்தப்பாவும் ஆகும். உபாலி தென்னக்கோனின் கை,கால்களை உடைத்து அவரை கொல்ல முயற்சித்தது யார்? நாமல், மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் கோதாபய ராஜபக்‌ஷ ஆகியோரே ஆகும். ரதுபஸ்வெல, கட்டுநாயக்கவில் துப்பாக்கி சூட்டை நடத்தி கொன்றவர்களும் நாமலும், மஹிந் ராஜபக்‌ஷவும் மற்றும் கோதாபய ராஜபக்‌ஷவுமே ஆகும்.

 முழு நாட்டையும் கொள்ளையடித்த குடும்பம் இது. ராஜபக்ஷர்கள் பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்போது எரிபொருள், எரிவாயு வரிசை தொடர்பில் நாமல் ராஜபக்ஷ புலம்புகிறார். அவ்வாறு எங்கே இருக்கின்றது. அது சிறையில் இருக்கின்றதா? 2022இற்கு முன்னர் இருந்த நிலைமையை பாருங்கள். அப்போது உலகில் எரிபொருள் நெருக்கடி இருக்கவில்லை. ஆனால் இங்கு எரிபொருள்,எரிவாயு வரிசை ஏற்பட்டிருந்தது. அதனை பாருங்கள். இப்போது நாமல் பொய்க்காரராகியுள்ளார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026 இறுதி காலாண்டில் மின் கட்டணத்தில்...

2026-11-11 17:41:14
news-image

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிச்சயம் இரத்துச்...

2026-11-11 22:41:08
news-image

காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் இயற்றப்படுவதை நாம் ஏற்பதில்லை...

2026-11-11 22:31:13
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி...

2026-11-11 17:27:27
news-image

2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அறிமுகமாகும் மெட்ரோ...

2026-11-11 17:23:45
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்க வரவு -...

2026-11-11 18:21:49
news-image

சவூதி நீதிமன்ற வழக்கிலிருந்து அனோஜன் சிவராசா...

2026-11-11 21:12:02
news-image

சஜித் பிரேமதாச விநியோகித்த பேருந்துகளுக்கு முறையாகச்...

2026-11-11 13:22:17
news-image

பொருளாதாரத் தோல்விகளை மூடிமறைக்க எதிர்க்கட்சிகளை முடக்கும்...

2026-11-11 17:51:02
news-image

2027 வரவு செலவுத் திட்டத்தை நலன்புரி...

2026-11-11 20:54:31
news-image

விசுவமடு மகாவித்தியால மைதானத்திற்கான சுற்றுவேலியை அமைத்துக்கொடுத்த...

2026-11-11 20:50:59
news-image

மலையக மக்களின் காணி, வீடமைப்பு உரிமைகளுக்காக ...

2026-11-11 18:22:24